ரஜினி, ஷாருக் கான் என்னை அழைத்தார்கள்… அதிலும் ரஜினி 2 தடவை? பெப்சி உமா

பெப்சி உமாவை தெரியாதவர்கள் இருக்க முடியாது. தமிழ் சின்னத்திரையில் நட்சத்திர தொகுப்பாளியாக வலம் வந்தவர் அவர்.
ஹீரோயின்களுக்கு நிகராக அந்த காலத்தில் அவருக்கு புகழ் இருந்தது. மேலும் அவருக்கு பல சினிமா வாய்ப்புகளும் தேடி வந்தது.
பெப்சி உமாவை முத்து படத்தில் ஹீரோயினாக நடிக்க வைக்க ரஜினி கேட்டாராம். ஆனால் முடியாது என அவர் மறுத்துவிட அதன் பிறகு தான் மீனாவுக்கு வாய்ப்பு சென்று இருக்கிறது.
இரண்டாவது முறையும் ரஜினி வேறொரு படத்திற்காக கூப்பிட்டார், நான் முடியாது என கூறிவிட்டேன் என பெப்சி உமா தெரிவித்து இருக்கிறார்.
மேலும் ஹிந்தியில் ஷாருக் கான் ஜோடியாக ஒரு படத்தில் நடிக்க வாய்ப்பு வந்ததாம். அதையும் மறுத்துவிட்டாராம்.
சினிமாவில் நடிக்க எனக்கு விருப்பம் இல்லை என ஒரே ஒரு காரணத்தை தான் அவர் எல்லோருக்கும் கூறி இருக்கிறார்.
(Visited 1 times, 1 visits today)