சம்பளமே வாங்காமல் 6 மணி நேரம் மணிமேகலை செய்த வேலை…

சின்னத்திரையில் மிகவும் பிரபலமான தொகுப்பாளினியாக வலம் வருகிறார். இவர் குக் வித் கோமாளி நிகழ்ச்சியின் மூலம் பிரபலமானார். மக்கள் மத்தியில் தனக்கென்று தனி இடத்தையும் பிடித்தார்.
ஆனால், கடந்த குக் வித் கோமாளி சீசன் 5ல் ஏற்பட்ட பிரச்சனை காரணமாக நிகழ்ச்சியில் இருந்து வெளியேறினார். இதன்பின், ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான டான்ஸ் ஜோடி டான்ஸ் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கினார். மேலும் தற்போது சிங்கள் பசங்க நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி வருகிறார்.
எந்த நிகழ்ச்சியை யார் தொகுத்து வழங்கினாலும் சம்பளம் பெறுவது வழக்கம்தான். ஆனால், சமீபத்தில் ஆறு மணி நேரம் நடந்த ஒரு படத்தின் இசை வெளியீட்டு விழாவை தொகுத்து வழங்க மணிமேகலை சம்பளம் வாங்கவே இல்லை.
அது வேறு யாருடைய படமும் இல்லை. KPY பாலா ஹீரோவாக அறிமுகமாகியுள்ள காந்தி கண்ணடி படத்தின் இசை வெளியீட்டு விலைதான்.
இந்த நிகழ்ச்சியை ஆறு மணிநேரம் மணிமேகலை சம்பளமே வாங்காமல் தொகுத்து வழங்கியுள்ளார். இதனை பாலா கூறி தனது நன்றியையும் மணிமேகலைக்கு தெரிவித்துள்ளார்.