தமிழ், ஹிந்தியில் ஒரே நேரத்தில் உருவாகும் கஜினி- 2 – ஏ.ஆர்.முருகதாஸ் அப்டேட்
																																		ஹிந்தியில் சல்மான் கான் நடிப்பில் சிக்கந்தர் என்ற படத்தை இயக்கியுள்ளார் ஏ.ஆர்.முருகதாஸ். இந்த படத்தின் டிரைலர் வெளியாகியுள்ளது. அதில் இப்படம் மார்ச் 30 தேதி திரைக்கு வருவதாக அறிவித்துள்ளார்கள்.
இதில் ராஷ்மிகா மந்தனா நாயகியாகவும், சத்யராஜ் வில்லனாகவும் நடித்துள்ளனர். இதையடுத்து சிவகார்த்திகேயன் நடிப்பில் மதராஸி என்ற படத்தை இயக்கி வருகிறார் முருகதாஸ்.

இந்நிலையில் 2005ம் ஆண்டில் சூர்யா, அசின், நயன்தாரா நடிப்பில் தான் இயக்கிய கஜினி படத்தின் இரண்டாம் பாகத்தை விரைவில் இயக்கப் போகிறார் ஏ.ஆர்.முருகதாஸ்.
இது குறித்து அவர் கூறுகையில்,
கஜினி- 2 படத்தை இயக்குவது குறித்து ஆலோசித்து வருகிறேன். தெலுங்கு பட தயாரிப்பாளர் அல்லு அரவிந்த் அந்த படத்தை தயாரிக்க உள்ளார். அதனால் அதற்கான சரியான நேரம் வரும்போது அப்படத்தை இயக்குவேன்.

அதோடு, கஜினி- 2 படத்தை தமிழ், ஹிந்தியில் ஒரே நேரத்தில் இயக்குவேன் என்கிறார் முருகதாஸ். கஜினி படத்தின் ஹிந்தி ரீமேக்கில் அமீர்கான் நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
        



                        
                            
