அஜித்தின் புதுபட நடிகைகள் யார் யார் தெரியுமா?
 
																																		குட் பேட் அக்லியை தொடர்ந்து அஜித்தின் அடுத்த படமான ஏகே 64 படத்தையும் ஆதிக் ரவிச்சந்திரன்தான் இயக்கப்போகிறார் என கூறப்படுகிறது. விரைவில் இதற்கான அறிவிப்பையும் எதிர்பார்க்கலாம் என்கின்றனர்.

GBU படத்திற்கு இசையமைத்த இசையமைப்பாளர் ஜி.வி. பிரகாஷ் தான் இப்படத்திற்கும் இசையமைக்கிறாராம். இந்த நிலையில்,இப்படத்தில் அஜித்துடன் இணைந்து இரண்டு நடிகைகள் நடிக்கவிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
அதன்படி, நடிகை நயன்தாரா இப்படத்தில் கதாநாயகியாக நடிக்கவுள்ளாராம். இவர் ஏற்கனவே அஜித்துடன் இணைந்து பில்லா, ஏகன், ஆரம்பம், விஸ்வாசம் ஆகிய திரைப்படங்களில் நடித்துள்ளார்.

மேலும் நடிகை பூஜா ஹெக்டே இப்படத்தில் இரண்டாம் கதாநாயகியாக நடிக்கப்போவதாக அப்டேட் வெளியாகியுள்ளது. அப்படி நடந்தால் அஜித்துடன் பூஜா ஹெக்டே இணைவது இதுவே முதல் முறையாகும். ஆனால், இது எந்த அளவிற்கு உண்மை என தெரியவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

 
        



 
                         
                            
