விஜய்யின் தனி விமானத்தின் விலை குறித்து தகவல்

தமிழ் சினிமாவில் உச்ச நட்சத்திரமாக ரசிகர்களால் கொண்டாடப்பட்டு வருபவர் தளபதி விஜய். இவர் தற்போது தனது சினிமா வாழ்க்கையை எண்டுகார்டு போட்டுவிட்டு, முழுமையாக அரசியலில் களமிறங்கியுள்ளார்.
ஹெச். வினோத் இயக்கத்தில் உருவாகி வரும் ஜனநாயகன் படம் தான், தனது கடைசி திரைப்படம் என விஜய் அறிவித்துள்ளார். அரசியலில் களமிறங்கியுள்ள விஜய் சமீபத்தில் கோயம்பத்தூரில் தனது கட்சி சார்பாக பூத் கமிட்டி மாநாடு நடத்தினார்.
அங்கு அவருக்கு மிகப்பெரிய வரவேற்பு மக்கள் மத்தியில் கிடைத்தது. இதை தொடர்ந்து ஜனநாயகன் படப்பிடிப்பிற்காக மதுரை விமான நிலையத்திற்கு வந்த விஜய்க்கு, மதுரையிலும் மக்கள் தங்களது அன்பை வாரிவழங்கினார்கள்.
விஜய் தற்போது தனது பயணத்திற்காக தனி விமானம் ஒன்றை பயன்படுத்தி வருகிறார். இந்த நிலையில், அந்த தனி விமானத்தின் விலை குறித்து தகவல் வெளியாகியுள்ளது.
அதன்படி, விஜய் பயன்படுத்தும் தனி விமானத்தை விலை ரூ. 8 கோடி என கூறப்படுகிறது. மேலும் இந்த தனி விமானத்தின் ஒரு நாள் வாடகை மட்டுமே ரூ. 14 லட்சம் என தகவல் வெளியாகியுள்ளது.