மீண்டும் தமிழ் சினிமா பக்கம் என்ட்ரி கொடுக்கும் அப்பாஸ்

90ஸ் காலகட்டத்தில் முன்னணி ஹீரோவாக சாக்லேட் பாயாக வலம் வந்தவர் அப்பாஸ். இவர் கடந்த சில ஆண்டுகளுக்கு முன் சினிமாவில் இருந்து விலகி வெளிநாட்டில் செட்டிலாகிவிட்டார்.
ஆனால், தற்போது மீண்டும் தமிழ் சினிமா பக்கம் என்ட்ரி கொடுத்துள்ளார். விக்ரம் வேதா எனும் மாபெரும் வெற்றிப்படத்தை கொடுத்த புஷ்கர் காயத்திரி உருவாக்கத்தில் தயாராகி வரும் வெப் தொடரில் அப்பாஸ் நடித்து முடித்துள்ளார்.
இந்த வெப் தொடரை இயக்குநர் சற்குணம் இயக்க, துஷாரா விஜயன் கதையின் நாயகியாக நடித்துள்ளார். மேலும் நடிகை அதிதி பாலன் இப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார்.
இந்த வெப் தொடரின் படப்பிடிப்பு நிறைவு பெற்ற நிலையில், அமேசான் பிரைமில் இந்த வெப் தொடர் 2026ஆம் ஆண்டு ஒளிபரப்பாக உள்ளது. இதற்கான அறிவிப்பு விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த வெப் தொடர் மட்டுமின்றி, ஜி.வி. பிரகாஷ் நடிப்பில் உருவாகும் படத்திலும் அப்பாஸ் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். இப்படத்தை அறிமுக இயக்குநர் இயக்கி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.