இவருக்கு இப்படி ஒரு திறமையா? கின்னஸ் உலக சாதனை படைத்தார் சிரஞ்சீவி

திரைப்படங்களில் அதிக நடன ஆசைவுகளை வெளிப்படுத்தியதற்காக தெலுங்கு சூப்பர் ஸ்டார் சிரஞ்சீவிக்கு கின்னஸ் உலக சாதனையாளர்கள் விருது இன்று வழங்கப்பட்டது.
தன்னை ஒரு சிறந்த நடிகராக நிலை நிறுத்தி பல விருதுகளை வென்றுள்ள இவருக்கு மற்றும்மொரு கௌரவம் கிடைத்துள்ளது.
அதாவது, 45 ஆண்டுகளில் தனது 156 படங்களில் 537 பாடல்களில் 24ஆயிரத்திற்கும் மேற்பட்ட நடன அசைவுகளை நிகழ்த்தியுள்ளார். இதனை கௌரவிக்கும் வகையில் அவரது பெயர் கின்னஸ் உலகசாதனை புத்தகத்தில் இடம் பெற்றுள்ளது.
இந்த நிகழ்ச்சி ஹைதராபாத்தில் இன்று நடைபெற்றது. இதில் சிறப்பு விருந்தினராக அமீர் கான் கலந்து கொண்டு பாராட்டு சான்றிதழ் வழங்கி கௌரவித்தார்.
இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பேசிய அமீர் கான், உங்களை போல நானும் சிரஞ்சீவியின் மிகப்பெரிய ரசிகன் தான். இந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்ள அவர் என்னிடம் கேட்ட போது, நான் எதற்கு என்னிடம் கேட்கிறீர்கள். ஆர்டர் போடுங்க சார் என்று சொன்னேன்.
சிரஞ்சீவி சார் ஆடிய எந்த பாடலைப் பார்த்தாலும் அதில் அவர் மகிழ்ச்சியாக ஆடி இருப்பார். என்ன கஷ்டமான ஸ்டேப்பாக இருந்தாலும் அசால்டாக ஆடி இருப்பார். அவர் ஆடுவதை பார்த்துவிட்டால், அடுத்து அதில் இருந்து நமது பார்வை மாற்ற முடியாது. அது தான் சிரஞ்சீவியின் தனித்துவமான திறமை என்றார்.
(Visited 14 times, 1 visits today)