1,150 டன் எடையுள்ள இரு கப்பல்களை பற்களால் கட்டி இழுத்த மல்யுத்த வீரர்!
எகிப்திய மல்யுத்த வீரர் ஒருவர் 700 டன் (635,000 கிலோ) எடையுள்ள கப்பலை தனது பற்களால் இழுத்து சாதனை படைத்துள்ளார்.
எகிப்தின் செங்கடல் பகுதியில் உள்ள ஹுர்கடாவில் 44 வயதான அஷ்ரஃப் மஹ்ரூஸ் என்ற மல்யுத்த வீரரே இந்த சாதனையை படைத்துள்ளார்.
இதனைத் தொடர்ந்து அவர் சுமார் 1,150 டன் (1,043,000 கிலோ) எடையுள்ள இரண்டு கப்பல்களை ஒன்றாக இழுத்ததாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

இது தொடர்பில் கருத்து வெளியிட்ட மஹ்ரூஸ் இன்று, நான் உலக சாதனையை முறியடிக்க வந்துள்ளேன். கடவுளுக்கு நன்றி, நான் இரண்டையும் இழுத்தேன், கடவுள் என்னை உலகின் வலிமையான மனிதனாக ஆசீர்வதித்துள்ளார் என குறிப்பிட்டுள்ளார்.
துறைமுக நகரமான இஸ்மாலியாவைச் சேர்ந்த இந்த மல்யுத்த வீரர், தனது முயற்சியின் வீடியோக்கள் மற்றும் புகைப்படங்களை கின்னஸ் உலக சாதனைக்கு அனுப்புவதாகக் கூறியுள்ளமை குறிப்பிடத்தக்கது.





