பதற்றத்தில் உலகம் – அணுவாயுதங்களை குவிக்கும் நாடுகள்

உலகின் சில நாடுகள் அணுவாயுத இருப்பைப் பெருக்கி வருவதாகத் தகவல் வெளியாகி உள்ளது.
உலகில் பதற்றம் அதிகரித்துள்ள சூழலில் இந்த அதிகரிப்பு ஏற்பட்டுள்ளது.
பயன்பாட்டுக்கு ஏற்ற அத்தகைய 9,500 ஆயுதங்களை உலக நாடுகள் சேகரித்து வைத்துள்ளதாக ஸ்டாக்ஹோல்ம் அனைத்துலக அமைதி ஆய்வுக் கழகம் தெரிவித்துள்ளது.
சீனா அதன் ஆயுதங்களைப் பெருமளவு அதிகரித்துள்ளதாகக் கழகம் கூறியது. இந்தியா, பாகிஸ்தான், வட கொரியா ஆகியவையும் கூடுதல் ஆயுதங்களைப் பெற்றிருப்பதாக குறிப்பிடப்படுகின்றது.
எனினும் ரஷ்யாவும், அமெரிக்காவும் இன்னும் உலகின் சுமார் 90 விழுக்காட்டு அணுவாயுதங்களை வைத்துள்ளன.
(Visited 15 times, 1 visits today)