சவப்பெட்டிக்குள் சுவாசித்துக்கொண்டிருந்த பெண் – ஒரு வாரத்தின் பின்னர் மருத்துவமனையில் மரணம்
ஈக்குவடோரில் கடந்த வாரம் சவப்பெட்டியில் இருந்து உயிருடன் மீட்கப்பட்ட பெல்லா மொன்டொயா என்ற 76 வயது பெண் ஒருவாரகால சிகிச்சையின் பின்னர் உயிரிழந்துள்ளார்.
உயிருடன் மீட்கப்பட்ட பெண் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் தீவிர கிசிச்சை பிரிவில் உயிரிழந்துள்ளார் என அவரது மகன் கில்பேர்ட்டோ பார்பரா மொன் டொயா தெரிவித்துள்ளார்.
ஈக்குவடோர் சுகாதார அமைச்சும் இதனை உறுதி செய்துள்ளது.
அவரை தீவிர கண்காணிப்பின் கீழ் வைத்திருந்ததாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.
பபஹயோ என்ற இடத்தில் இறுதிநிகழ்வுகள் இடம்பெற்றுக்கொண்டிருந்தவேளை பிரதேப்பெட்டிக்குள் கண்விழித்த மொன்டொயோ பிரதேப்பெட்டியை தட்டத்தொடங்கினார் என உறவினர்கள் தெரிவித்துள்ளனர்.
நாங்கள் முதல்தடவை அவரை மருத்துவமனையில் சேர்த்தவேளை அவர் சுயநினைவற்றவராக காணப்பட்டார் ஆனால் சில மணித்தியாலங்களின் பின்னர் மருத்துவர் ஒருவர் அவர் உயிரிழந்துவிட்டதாக தெரிவித்து மரணச்சான்றிதழ் உட்பட ஏனைய ஆவணங்களை குடும்பத்தவர்களிடம் கையளித்தார் என மகன் தெரிவித்துள்ளார்.
அவரது உடலை இறுதிக்கிரியைகள் இடம்பெறும் இடத்திற்கு கொண்டுவந்த உறவினர்களிற்கு அதிர்ச்சி காத்திருந்தது.
ஐந்து மணித்தியாலங்களின் பின்னர் பிரேதப்பெட்டிக்குள் சத்தங்கள் கேட்டுள்ளன,நாங்கள் இருபது பேர் இருந்தோம் என தெரிவித்துள்ள பார்பரா மொன்டொயா ஐந்து மணித்தியாலங்களின் பின்னர் பிரேதப்பெட்டிக்குள் வித்தியாசமான சத்தங்கள் கேட்டன என தெரிவித்துள்ளார்.
துணியால்போர்த்தப்பட்டிருந்த எனது தாயார் பிரேதப்பெட்டியை தட்டினார் அதனை திறந்து பார்த்தவேளை அவர் சுவாசிப்பதை கண்டுபிடித்தோம் என அவர் தெரிவித்துள்ளார்.
இந்நிலையில் அவர் உயிரிழந்துள்ளமை இம்முறை உறுதிப்படுத்தப்பட்டுள்ள நிலையில் இறுதிநிகழ்வுகளிற்காக அதேஇடத்திற்கு அவரது உடலை கொண்டுசென்றுள்ளனர்.