குறுகிய காலத்தில் 21 நாடுகளில் முன்னெடுக்கப்பட்ட விசேட நடவடிக்கை : சிக்கிய 300 நபர்கள்!

மேற்கு ஆபிரிக்க ஒழுங்கமைக்கப்பட்ட குற்றக் குழுக்களை சேர்ந்த ஏறக்குறைய 300 பேரை பொலிஸார் கைது செய்துள்ளனர்.
அவர்களிடம் இருந்து $3 மில்லியன் பறிமுதல் செய்யப்பட்டதாவும், 720 வங்கிக் கணக்குகள் முடக்கப்பட்டுள்ளதாகவும், இன்டர்போல் தெரிவித்துள்ளது.
ஆபரேஷன் ஜாக்கல் III எனப் பெயரிடப்பட்ட இந்த விசேட நடவடிக்கை , ஏப்ரல் 10 முதல் ஜூலை 3 வரை 21 நாடுகளில் முன்னெடுக்கப்பட்டுள்ளது.
ஆன்லைன் நிதி மோசடி மற்றும் அதன் பின்னணியில் உள்ள குற்றக் கும்பல்களை குறிவைத்தே இந்த அதிரடி நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளதாக அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேற்கு ஆபிரிக்காவில் இருந்து உருவாகும் நிதி மோசடிகளின் அளவு ஆபத்தானது மற்றும் அதிகரித்து வருகிறது” என்று இன்டர்போலின் நிதிக் குற்றம் மற்றும் ஊழல் எதிர்ப்பு மையத்தின் இயக்குனர் ஐசக் ஓகினி கூறினார்.
(Visited 22 times, 1 visits today)