இலங்கை

கொழும்பில் வாகனம் வைத்திருப்பவர்களுக்கு விசேட அறிவிப்பு

கொழும்பு மாநகரில் சீருடை அல்லது உத்தியோகபூர்வ அடையாள அட்டை இன்றி வாகனங்களை நிறுத்துவது தொடர்பான பணம் சேகரிக்க வரும் மக்களுக்கு பணம் வழங்க வேண்டாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

கொழும்பு மாநகர சபை இது தொடர்பில் அறிவித்தல் விடுத்துள்ளது.

அவ்வாறான அனுமதியற்ற அனுமதிச் சீட்டுகள் வழங்கப்பட்டால் அருகிலுள்ள பொலிஸ் நிலையத்திற்கு அறிவிக்குமாறு அதன் பிரதிப் பணிப்பாளர் பொறியியலாளர் மஞ்சுள குலரத்ன தெரிவித்துள்ளார்.

வாகனம் நிறுத்துமிடத்தில் வாகனத்தை நிறுத்திய பின்னர் 5 நிமிடங்கள் அவகாசம் வழங்கப்படும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

மேலும் வாகனம் நிறுத்துமிடத்தை விட்டு வெளியேறும் போது பணம் வசூலிக்கும் நபர் இல்லை எனில் பணம் செலுத்த வேண்டிய அவசியமில்லை எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

SR

About Author

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
இலங்கை செய்தி

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு!

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு! இலங்கையில் பெண்களிற்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பெண் பாராளுமன்ற உறுப்பினர்கள் குழு பெண்களிற்கு எதிரான சைபர்
error: Content is protected !!