புகைப்பிடிக்காத தலைமுறை – ஐரோப்பிய நாடு ஒன்றின் அதிரடி நடவடிக்கை
போர்ச்சுகலில் புகைப்பிடிப்பதைத் தடை செய்வது குறித்துப் பரிசீலிக்கப்படுகிறது.
பாடசாலைகள் மருத்துவமனைகள், மூடப்பட்ட வெளிப்புற இருக்கைகள் கொண்ட இடங்கள் ஆகியவற்றில் இதனை தடை செய்ய திட்டமிடப்பட்டுள்ளது.
அந்நாட்டின் சுகாதார அமைச்சர் மனுவேல் பிஸ்ஸாரோ (Manuel Pizarro) அது குறித்துப் பேசினார்.
உட்புறங்களில் புகைப்பிடிப்பதைத் தடை செய்வதும் புதிய சட்டத்தில் அடங்கும்.
2025ஆம் ஆண்டிலிருந்து புகைப்பிடிக்கத் தடை விதிக்கப்படும் இடங்களில் புகையிலை பொருள்களின் விற்பனை தடை செய்யப்படும்.
புதிய சட்டம், இளையர்களுக்குப் புகையிலை இல்லாத சுற்றுப்புறத்தை அமைத்துக் கொடுக்கவும், புகைப்பிடிப்பவர்கள் அந்தப் பழக்கத்திலிருந்து மீண்டு வரவும் உதவும் என்று நம்புவதாகச் சுகாதார அமைச்சர் கூறினார்.
2040ஆம் ஆண்டிலிருந்து புகைப்பிடிக்காத தலைமுறையைப் போர்ச்சுகலில் உருவாக்குவதே அரசாங்கத்தின் இலக்கு என்றும் அவர் கூறினார்.