இலங்கையில் கணவனை காப்பாற்ற சென்ற மனைவிக்கு காத்திருந்த அதிர்ச்சி
ஹெரோயினுடன் கைது செய்யப்பட்ட தனது கணவரை விடுவிப்பதற்காக களுத்துறை தெற்கு ஊழல் தடுப்புப் பிரிவின் நிலைய அதிகரிக்கு 300,000 ரூபா லஞ்சம் வழங்கியதாகக் கூறப்படும் பெண் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
களுத்துறை வடக்கு பகுதியை சேர்ந்த பெண்ணொருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.
களுத்துறை தெற்கு லஞ்ச ஒழிப்புப் பிரிவினர் ஹெரோயின் போதைப்பொருளுடன் கணவரை கைது செய்து களுத்துறை தெற்கு பொலிஸாருக்கு அழைத்து வந்ததையடுத்து சந்தேகநபர் தனது மனைவிக்கு சட்டையை எடுத்து வருமாறு தொலைபேசியில் அழைப்பு விடுத்துள்ளார்.
சுமார் 20 நிமிடங்களின் பின்னர் பொலிஸ் நிலையத்திற்கு வந்த மனைவி, ஹெரோயின் வழக்கில் சந்தேகப்படும் நபரை மூன்று இலட்சம் ரூபா கொடுத்து விடுவிக்குமாறு லஞ்ச ஒழிப்புப் பிரிவு பொலிஸ் நிலைய அதிகாரியிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.
லஞ்ச ஒழிப்புப் பிரிவு, தலைமையக பொலிஸ் பரிசோதகர் ருவன் விஜேசிங்கவுக்கு அறிவித்ததையடுத்து, சந்தேக நபரின் மனைவியும் கைது செய்யப்பட்டதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.
சந்தேகநபர்கள் களுத்துறை நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்படவுள்ளனர்.