தமிழ்நாடு

தமிழகத்தில் விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் கடலுக்குள் திருமணம் செய்து கொண்ட காதல் ஜோடி

காற்று மாசு குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்காக ஆழ்கடலில் திருமணம் நடைபெற்று உள்ளது.

சென்னை மற்றும் புதுச்சேரியில் செயல்படும் ஆழ்கடல் பயிற்சி நிறுவனம் ஒன்றில் தீபிகா என்பவர் பயிற்சியாளராகச் செயல்பட்டு வருகிறார்.

சுற்றுச்சூழல் பாதுகாப்பில் மிகுந்த ஆர்வம் கொண்ட தீபிகா, சுத்தமான காற்றின் முக்கியத்துவத்தை உணர்த்தும் வகையில், பாரா கிளைடிங் செய்து தனது காதலர் ஜான் டி பிரிட்டோவிடம் காதலை வெளிப்படுத்தினார்.

அந்த இருவரும் கடந்த ஓராண்டாகக் காதலித்து வந்த நிலையில், கடல் மாசுபாடு மற்றும் கடல்வாழ் உயிரினங்களைப் பாதுகாப்பதன் அவசியத்தை உணர்த்தும் வகையில், ஆழ்கடலில் திருமணம் செய்து கொள்ள முடிவு செய்தனர்.

அதன்படி, புதுச்சேரி கடல் பகுதியில் 50 அடி ஆழத்தில், அலங்காரம் செய்யப்பட்டு திருமண கோலத்தில் இருவரும் மோதிரம் மாற்றிக்கொண்டு திருமணம் செய்து கொண்டனர்.

இது குறித்து தீபிகா-ஜான் டி பிரிட்டோ ஜோடி கூறுகையில், ஆழ்கடல் திருமணத்திற்கு சுமார் 40 நிமிடங்கள் வரை ஆனதாகவும் ஆழ்கடல் உயிரினங்களின் பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வுக்காக இவ்வாறு திருமணம் செய்து கொண்டதாகவும் தெரிவித்துள்ளனர்.

(Visited 61 times, 1 visits today)

Mithu

About Author

You may also like

தமிழ்நாடு

தமிழகத்தில் நாளுக்கு நாள் கொரோனாவின் தாக்கம்

தமிழகத்தில் நாளுக்கு நாள் கொரோனாவின் தாக்கம் கணிசமாக அதிகரித்து வரும் நிலையில் ராணிப்பேட்டை மாவட்டம் வாலாஜாபேட்டை அரசு தலைமை மருத்துவமனையில் கொரோனா  தொற்று முன்னேற்பாடு சிகிச்சை பணிகள்
தமிழ்நாடு

பள்ளிக்கு அனுப்ப பெற்றோர்கள் மறுப்பு

நெமிலி அடுத்த கீழ்வீதி கிராமத்தில் புதிய பள்ளி கட்டிடம் கட்டித் தராததை கண்டித்து மாணவர்களை பள்ளிக்கு அனுப்ப பெற்றோர்கள் மறுப்பு. மாணவர்கள் இன்றி வெறிச்சோடி காணப்படும் ஆதிதிராவிடர்
error: Content is protected !!