ஐரோப்பா செய்தி

UKவில் குற்றவாளியை கண்டுப்பிடித்து கொடுப்பவர்களுக்கு 20000 பவுண்ட்ஸ் வெகுமதி அறிவிப்பு!

கடந்த மார்ச் மாதம் வடக்கு லண்டனில் இளைஞர் ஒருவரைக் கொலை செய்த நபரை கண்டுப்பிடித்து கொடுப்பவர்களுக்கு, 20000 பவுண்ட்ஸ் வெகுமதி வழங்கப்படும் என பிரித்தானிய காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

மார்ச் 20 ஆம் திகதி இரவு 8.45 மணிக்கு டோட்டன்ஹாமில் (Tottenham ) உள்ள வேவர்லி (Waverley) சாலையில் 27 வயதான மஹத் அப்தி முகமது (Mahad Abdi Mohamed) என்ற இளைஞர் தலையில் சுடப்பட்ட நிலையில் உயிரிழந்தார்.

சம்பவத்தை தொடர்ந்து தாக்குதல்தாரி தப்பிச் சென்ற நிலையில் மார்ச் மற்றும் ஏப்ரல் மாதங்களுக்கு இடையில் நால்வர் கைது செய்யப்பட்டனர்.

இருப்பினும் அவர்கள் பிணையில் விடுதலை செய்யப்பட்டனர். இந்நிலையில் காவல்துறையினரின் விசாரணைகளில் மஹத்தை கொன்ற நபர் வேறு ஒருவர் மீது தாக்குதல் நடத்த திட்டமிட்டுள்ளதாக கண்டறியப்பட்டுள்ளது.

இந்நிலையில் காவல்துறையினர் மீளவும் அவரை தேடி வருகின்றனர். அவரை கண்டுப்பிடித்து கொடுப்பவர்களுக்கு, அல்லது அவர் பற்றிய தகவல்களை வழங்குபவர்களுக்கு வெகுமதி வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

 

 

VD

About Author

You may also like

செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
செய்தி

உள்ளுராட்சி தேர்தல் : தபால் மூல வாக்களிப்புக்கான திகதி அறிவிப்பு!

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால் மூல வாக்கெடுப்புக்களை இம்மாதம் 28ஆம் திகதி முதல் 31ஆம் திகதி வரை நடத்துவதற்கு தீர்மானித்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. நிதி நெருக்கடி
error: Content is protected !!