ஏ.ஆர்.ரஹ்மானின் வாழ்க்கையில் இப்படி ஒரு சோகமா?
தனது இசையால் அனைவரையும் கட்டிப்போட்டவர்தான் இசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மான். காதல் ரோஜாவே முதல் ஆரம்பமாகி இன்று வரை தனது இசைப்பயணத்தை வெற்றிகரமாக தொடர்பவர்தான் இவர்.
இசையமைப்பாளர் ரஹ்மான் என்று கூறினாலே அந்த படம் தானாகவே வெற்றியடைந்து விடும். அந்த அளவுக்கு ரஹ்மானின் பாடல்களுக்கு வரவேற்புண்டு.

சமீபத்தில் யூடியூப் சேனல் ஒன்றுக்கு அளித்த நேர்காணலில், தனது வெற்றியும் புகழும் தனிப்பட்ட வாழ்க்கையில் ஏற்படுத்திய தாக்கத்தை பற்றி பகிர்ந்துள்ளார். குறிப்பாக, அவரின் திருமண வாழ்க்கை விவாகரத்தில் முடிந்ததன் பின்னணி காரணம் குறித்து பேசியுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தனது மூன்று குழந்தைகளும் தற்போது சாய்ரா பானுவுடன்தான் வசித்து வருகிறார்கள் என்பதையும் கூறி இருந்தார்.

குடும்பத்தோடு நான் வெளியே சென்றாலும் என்னை ஒரு சினிமா பிரபலமாகவே மக்கள் பார்க்கிறார்கள். நான் ஒரு சாதாரண மனிதன் அல்ல என்ற உணர்வு தான் அது குடும்பத்தினருக்கு ஏற்படுத்துகிறது.
பொது இடங்களில் ரசிகர்களின் அளவற்ற நேசம், சில நேரங்களில் தனிப்பட்ட சுதந்திரத்தை கெடுகிறது. உணவு சாப்பிடும்போது கூட ‘ஒரு செல்பி, ஒரு புகைப்படம்’ என்ற கோரிக்கைகளிலிருந்து தப்பிக்க முடியாத சூழ்நிலை ஏற்படும். “நான் சாப்பிட்டுக் கொண்டிருக்கிறேன் என்று சொல்லியும், ரசிகர்கள் அது முடியும் வரை காத்திருக்க விரும்புவதில்லை. அவர்கள் அன்பை நான் மதிக்கிறேன், ஆனால் அதை சமாளிப்பது எப்போதும் கடினமே.

இதன் எதிர்மறை தாக்கம் குடும்பத்திற்கே அதிகம் என்று ரகுமான் வேதனையுடன் குறிப்பிட்டார். குழந்தைகள் சிறிய வயதிலிருந்தே என்னுடன் தனிப்பட்ட நேரம் செலவிட முடியாத சூழ்நிலை இருந்தது. குடும்பமாக ஒன்று கூடுவதும் மிகக் குறைவு. “ஒவ்வொருவருக்கும் அவரவருடைய வேலை, பொறுப்புகள் என அனைவரும் அவரவரது வாழ்க்கையில் பிஸியாகிவிட்டார்கள்.
ஒரே டேபிளில் உட்கார்ந்து உணவருந்துவது கூட ஒரு பெரிய நிகழ்வாக மாறிவிட்டது.

இசைத் துறையில் உள்ள இயக்குநர்கள், தயாரிப்பாளர்கள், பாடகர்கள் – அனைவருடனும் நெருக்கமான உறவு இருந்தாலும், வேலைப்பளு காரணமாக நண்பர்களுடனும் கூட நேரம் செலவிட முடியாத நிலை உருவாகியிருப்பதாக ரகுமான் தெரிவித்துள்ளார்.






