சிவகார்த்திகேயனுக்கு பல்பு கொடுத்த ஏ.ஆர்.ரஹ்மான்.. தலைவர் வேற லெவல்
ஏ.ஆர். ரஹ்மான் உலகளவில் புகழடைந்த இசையமைப்பாளர் என்பது அனைவரும் அறிந்ததே. ஆஸ்கர், கிராமி உள்ளிட்ட விருதுகளை பெற்று புகழடைந்த அவர் ஏராளமான தேசிய விருதுகளையும் வாங்கி குவித்திருக்கிறார்.
அவரது இசையமைப்பில் கடைசியாக ஆடு ஜீவிதம், மாமன்னன் உள்ளிட்ட படங்கள் வந்தன. அடுத்ததாக காதலிக்க நேரமில்லை உள்ளிட்ட படங்களும் வரவிருக்கின்றன. சூழல் இப்படி இருக்க சிவகார்த்திகேயனிடம் அவர் உரையாடிய வீடியோ ஒன்று ட்ரெண்டாகியிருக்கிறது.
ஏ.ஆர்.ரஹ்மானை பொறுத்தவரை பெரும்பாலும் அமைதியாக இருந்தாலும் தான் பேசும் வார்த்தைகளில் தக் லைஃப் கொடுக்கக்கூடியவர். அப்படி அவர் சிவகார்த்திகேயனுக்கு தக் லைஃப் கொடுத்தது ட்ரெண்டாகியிருக்கிறது.
அதாவது அவர் ஆஸ்கர் வென்ற சமயத்தில் சிவகார்த்திகேயன் ஒரு விழாவில் ஏ.ஆர்.ரஹ்மானிடம், ‘முன்னாடி இருந்த ஏ.ஆர்.ரஹ்மானுக்கும், ஆஸ்கர் வாங்கிய ஏ.ஆர்.ரஹ்மானுக்கும் என்ன வித்தியாசம் இருக்கிறது’ என்று கேட்டார். அதற்கு பதிலளித்த ரஹ்மான், ‘வயது ஏறியிருக்கிறது’ என்று ஒரே வார்த்தையில் பல்பு கொடுத்தார். அந்த வீடியோ இப்போது திடீரென ட்ரெண்டாகியிருக்கிறது.