துப்பாக்கி – 2… ஏ.ஆர். முருகதாஸ் உடைத்த ரகசியம்

ஏ.ஆர். முருகதாஸ் இயக்கத்தில் தளபதி விஜய் நடிப்பில் உருவாகி 2012ம் ஆண்டு வெளிவந்த திரைப்படம் துப்பாக்கி. இப்படத்தை கலைப்புலி எஸ். தாணு தயாரித்திருந்தார்.
காஜல் அகர்வால் கதாநாயகியாக நடிக்க வித்யுத் ஜாம்வல் வில்லனாக நடித்திருந்தார். இந்த படம் விஜய்யின் கரியரில் முதல் முறையாக ரூ. 100 கோடி வசூல் செய்த திரைப்படம் ஆகும்.
தற்போது, ஏ.ஆர். முருகதாஸ் சிவகார்த்திகேயன் நடிப்பில் மதராஸி படத்தை இயக்கியுள்ளார். இந்நிலையில், முருகதாஸ் இயக்கத்தில் வெளியான படங்களில் எந்த படத்தை 2வது பாகம் எடுக்க விரும்புகிறீர்கள் என்று அவரிடம் கேள்வி எழுப்பப்பட்டது.
அதற்கு, நான் எடுத்த படங்களிலேயே 2ம் -பாகம் எடுப்பதற்கான சிறந்த படம் துப்பாக்கி தான். அப்படத்தில் லீவு முடிந்து விஜய் திரும்ப பணிக்கு செல்வார். அதை இரண்டாம் பாகம் எடுக்கும் ஐடியாவில் தான் உருவாக்கினேன்.
திரும்பி லீவுக்கு ஊருக்கு வரும்போது நடக்கும் சம்பவங்களை வைத்து இரண்டாம் பாகம் கதையை உருவாக்கலாம் என்ற யோசனையில் இப்படி ஒரு கிளைமாக்ஸ் காட்சியை வைத்திருந்தேன்” என்று தெரிவித்துள்ளார்.