பொழுதுபோக்கு

சூர்யாவின் கங்குவா படத்தின் படப்பிடிப்பு தொடர்பில் வெளியான தகவல்!

சூர்யாவின் கங்குவா படத்தின் படப்பிடிப்பு குறித்து புதிய  தகவல் வெளியாகியுள்ளது

இயக்குனர் சிவா இயக்கத்தில் சூர்யா தற்போது நடித்து வரும் படம் ‘கங்குவா’. ஸ்டுடியோ கிரீன் மற்றும் யுவி கிரியேஷன் நிறுவனம் தயாரிக்கும் இப்படத்தில் பாலிவுட் நடிகை திஷா பத்தானி, யோகி பாபு, கிங்ஸ்லி, கோவை சரளா, ஆனந்த் ராஜ் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர்.

தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைக்கும் இப்படம் 3டி முறையில் சரித்திர படமாக 10 மொழிகளில் வெளியாகவுள்ளது.

. ‘கங்குவா’ திரைப்படத்தின் முதல் தோற்ற போஸ்டர் மற்றும் மோஷன் போஸ்டரை சமீபத்தில் படக்குழு வெளியிட்டு ரசிகர்களை கவர்ந்தது. இப்படத்தின் படப்பிடிப்பு கொடைக்கானலில் நடந்து வருகிறது. அங்கு படத்தில் இடம்பெறும் பீரியட் போர்ஷன் சம்பந்தப்பட்ட காட்சிகள் படமாக்கப்பட்டு வருவதாக கூறப்படுகிறது.

இந்நிலையில், இப்படத்தின் படப்பிடிப்பு குறித்து புதிய அப்டேட் வெளியாகியுள்ளது. அதன்படி, ‘கங்குவா’ படத்தின் படப்பிடிப்பு வருகிற 19-ஆம் தேதி சென்னையில் நடைபெறவுள்ளதாகவும் இதில் சூர்யா, திஷா பதானியின் பாடல் காட்சி ஒன்று படமாக்கப்படவுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. மேலும், சென்னை படப்பிடிப்பு முடிந்தது மீண்டும் கொடைக்கானலில் படப்பிடிப்பு தொடங்கும் என்று தகவல் வெளியாகியுள்ளது .

(Visited 33 times, 1 visits today)
Avatar

TJenitha

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

பொழுதுபோக்கு

ஆஸ்கர் விருதை தட்டிச் சென்ற நாட்டு நாட்டு பாடல் – ரசிகர்கள் மகிழ்ச்சி

ஆர்.ஆர்.ஆர் திரைப்படத்தில் இடம்பெற்ற நாட்டு நாட்டு பாடலுக்கு ஆஸ்கார் விருது கிடைத்துள்ளது. சிறந்த பாடல் பிரிவில் அந்த பாடல் ஆஸ்கார் விருது வென்றுள்ளது. சினிமா உலகின் மிக
பொழுதுபோக்கு

பாண்டியர்களின் ஆட்டம் ஆரம்பம் : யாத்திசை படத்தின் முதல் நாள் வசூல் விபரம்!

  • April 23, 2023
பாண்டியர்களின் வீரவரலாற்றை சொல்லும் யாத்திசை திரைப்படம் நேற்று திரையறங்குகளில் வெளியாகி நல்ல விமர்சனத்தை பெற்று வருகிறது. அறிமுக இயக்குனர் தரணி ராசேந்திரன் இயக்கத்தில் புது முகங்களான சேயோன்

You cannot copy content of this page

Skip to content