அறிவியல் & தொழில்நுட்பம்

WhatsApp வீடியோ மெசேஜ் அம்சத்தில் அறிமுகமாகும் புதிய வசதி

வாட்ஸ்அப் உலகம் முழுவதும் ஏராளமான பயனர்களை கொண்டுள்ளது.

பயனர்களின் வசதிக்கு ஏற்ப புதிய அம்சங்களை அறிமுகம் செய்து வருகிறது. அந்த வகையில் வாட்ஸ்அப் கடந்த வருடம் இன்ஸ்டன்ட் வீடியோ மெசேஜ் அம்சத்தை அறிமுகம் செய்தது.

இதன் மூலம் பயனர்கள் வாட்ஸ்அப்பிலேயே வீடியோ ரெக்கார்ட் பதிவு செய்து அதை நண்பர்கள், உறவினர்களுக்கு அனுப்பலாம்.

இந்நிலையில், வாட்ஸ்அப் வீடியோ மெசேஜ் அம்சத்தில் குயிக் ரிப்ளை வசதி என்ற அம்சம் அறிமுகம் செய்ய உள்ளது. இதுதற்போது வாட்ஸ்அப் பீட்டா வெர்ஷனில் ஆண்ராய்ட் பயனர்களுக்கு வழங்கப்பட்டு வருகிறது. சோதனை அடிப்படையில் வழங்கப்படுகிறது.

வாட்ஸ்அப் வீடியோ மெசேஜ் பக்கத்தில் இந்த ஆப்ஷன் இடம்பெற்றுள்ளது. குறிப்பிட்ட வீடியோ மெசேஜ்களுக்கு உடனடியாக ரிப்ளை செய்யும் வகையில் இந்த அம்சம் கொண்டு வரப்பட்டுள்ளது.

முன்னதாக, மெசேஜ் ஓபன் செய்து பார்த்தபின் பதிலளிக்கும் வகையில் ஆப்ஷன் இருந்த நிலையில் தற்போது இதில் அப்டேட் கொடுக்கப்பட்டுள்ளது.

SR

About Author

You may also like

அறிவியல் & தொழில்நுட்பம்

தனிச் செயலி ஒன்றை அறிமுகம் செய்யும் Apple நிறுவனம்!

உலகில் மிகவும் பிரபலமாக Apple நிறுவனம் செவ்விசைப் பாடல்களுக்கென தனிச் செயலியை அறிமுகம் செய்யவுள்ளது. Apple Music Classical என்ற அந்தச் செயலியை அறிமுகம் செய்யவுள்ளதாக குறிப்பிடப்படுகின்றது.
அறிவியல் & தொழில்நுட்பம்

மார்ச் 28 திகதி வானத்தில் தோற்றவுள்ள ஆச்சரிய காட்சி! மக்கள் பார்க்க அரிய வாய்ப்பு

பூமிக்கு அருகே ஐந்து கோள்கள் வானத்தில் ஒன்றாக தோன்றும் காட்சிகளை மக்கள் காண சந்தர்ப்பம் மார்ச் 28ம் திகதி ஏற்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.இதுவரை நடக்காத அரிய வானியல் நிகழ்வுகளில்
error: Content is protected !!