பிரான்ஸ் தலைநகரில் அச்சுறுத்தும் கொள்ளை கும்பல்

பிரான்ஸ் தலைநகர் பாரிஸில் வீட்டின் உரிமையாளரை கட்டிவைத்துவிட்டு,பணம் கொள்ளையிடப்பட்ட சம்பவம் இடம்பெற்றுள்ளது.
30,000 யூரோக்கள் கொள்ளையிடப்பட்டுள்ளது. 8 ஆம் வட்டாரத்தின் Boulevard Malesherbes பகுதியில் உள்ள வீடொன்றுக்குள் பிற்பகல் 3 மணி அளவில் நுழைந்த முகக்கவசம் அணிந்த கொள்ளையர்கள் சிலர் வீட்டின் உரிமையாளரை தாக்கியுள்ளனர்.
பின்னர் அவரைக் கட்டிவைத்துவிட்டு, விட்டில் இருந்த பணம், நகைகள், ஆடம்பர கடிகாரங்கள், விலையுயர்ந்த தொலைபேசிகள் போன்றவற்றை கொள்ளையிட்டுக்கொண்டு சென்றனர்.
மொத்தமாக 30,000 யூரோக்கள் மதிப்புள்ள நகை, பணம் கொள்ளையிட்டுக்கொண்டு அங்கிருந்து தப்பிச் சென்றனர்.
சம்பவம் தொடர்பில் விசாரணைகள் இடம்பெற்று வருகிறது.
(Visited 20 times, 1 visits today)