இலங்கை செய்தி

புலம்பெயர் உறவுகளும் மக்களும் இணைந்து நடாத்திய மாபெரும் பட்டத் திருவிழா

வட்டுவாகல் புலம்பெயர் உறவுகளும் வட்டுவாகல் மக்களும் இணைந்து நடாத்திய மாபெரும் பட்டத் திருவிழா முல்லைத்தீவில் சிறப்பாக நடைபெற்றது

வட்டுவாகல் புலம்பெயர் உறவுகளும் மக்களும் இணைந்து நடாத்திய மாபெரும் பட்டத் திருவிழா இன்றைய தினம் (25) பிற்பகல் 2 மணிக்கு முல்லைத்தீவு சுற்றுலாமைய நகரக் கடற்கரையில் சிறப்பாக நடைபெற்றது.

நிகழ்வின் பிரதம அதிதிகளாக வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் து.ரவிகரன், முல்லைத்தீவு மாவட்ட அரசாங்க அதிபர் அ.உமாமகேஸ்வரன் ஆகியோர் கலந்து சிறப்பித்தனர்.

இவர்களோடு கரைதுறைப்பற்று பிரதேச சபையின் தவிசாளர் மற்றும் செயலாளர் ஆகியோரும் கலந்துகொண்டனர்.

சிறுவர்களுக்கு சிறந்த பொழுதுபோக்கை ஏற்படுத்திடும் நோக்கிலும் , சமூக மயமாக்கலை ஒருங்கிணைக்கும் நோக்கிலும் இந்தப் பட்டத்திருவிழா ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

இதில் பெருந்திரளான மக்கள் கலந்துகொண்டதுடன் 500 மேற்பட்ட பட்டங்களும் பறக்கவிடப்பட்டன. விசேடமாக சிறுவர்களை ஊக்குவிக்கும் நோக்கில் பட்டங்களும் வழங்கி வைக்கப்பட்டன.

Sainth

About Author

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
error: Content is protected !!