பொழுதுபோக்கு

இஷா அம்பானியின் அமெரிக்க வீட்டை 500 கோடிக்கு வாங்கிய பிரபல ஹாலிவுட் நடிகர்!

பிரபல தொழிலதிபர் அம்பானியின் மகள் இஷா அம்பானியின் லாஸ் ஏஞ்சல்ஸ் வீட்டை பிரபல ஹாலிவுட் நடிகர் ஒருவர் ரூ.500 கோடிக்கு விலைக்கு வாங்கியுள்ளார். இந்த செய்தி தற்போது வெளியாகியுள்ளது.

தொழிலதிபர் அம்பானியின் இளைய மகன் ஆனந்த் அம்பானியின் திருமணத்திற்கு முந்தைய கொண்டாட்ட நிகழ்வுகள் கடந்த சில வாரங்களுக்கு முன்பு நடைபெற்றது. பாலிவுட்டின் பல நட்சத்திரங்கள், முக்கிய பிரபலங்கள் கலந்து கொண்ட இந்த நிகழ்வு இணையத்தில் அதிகம் பேசு பொருளானது.

இந்த நிகழ்வை போலவே, கவனம் பெற்ற இன்னொரு விஷயம் அம்பானியின் மகள் இஷா அம்பானியின் கியூட்டான இரண்டு சுட்டிக் குழந்தைகள் தான். இஷாவுக்கும் தொழிலதிபர் ஆனந்த் பிராமலுக்கும் கடந்த 2018-ம் ஆண்டு திருமணம் நடந்தது. கடந்த 2022ம் ஆண்டு இவர்களுக்கு கிருஷ்ணா, ஆதித்யா என்ற இரட்டை குழந்தைகள் பிறந்தது.

www.hindustantimes.com/ht-img/img/2024/04/02/origi...

இஷா தான் கர்ப்பமாக இருந்தபோது அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸில் தான் பெரும்பாலும் ஓய்வெடுத்தார். இவரது அம்மா நீதா அம்பானியும் உடனிருந்து கவனித்துக் கொண்டார். இப்போது இந்த வீட்டை பிரபல ஹாலிவுட் நடிகர் பென் அஃப்லெக்கும் அவரது காதலி நடிகை ஜெனிஃபர் லோபஸும் ரூ. 500 கோடிக்கு வாங்கி இருக்கிறார்கள்.

கிட்டத்தட்ட 35,000 சதுர அடியில் கட்டப்பட்ட இந்த வீட்டில் 12 படுக்கையறைகள், 24 பாத்ரூம்கள், ஜிம், ஸ்பா, பேட்மிண்டன் கோர்ட் உள்ளிட்டப் பல வசதிகளும் இருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.

Mithu

About Author

You may also like

பொழுதுபோக்கு

ஆஸ்கர் விருதை தட்டிச் சென்ற நாட்டு நாட்டு பாடல் – ரசிகர்கள் மகிழ்ச்சி

ஆர்.ஆர்.ஆர் திரைப்படத்தில் இடம்பெற்ற நாட்டு நாட்டு பாடலுக்கு ஆஸ்கார் விருது கிடைத்துள்ளது. சிறந்த பாடல் பிரிவில் அந்த பாடல் ஆஸ்கார் விருது வென்றுள்ளது. சினிமா உலகின் மிக
பொழுதுபோக்கு

பாண்டியர்களின் ஆட்டம் ஆரம்பம் : யாத்திசை படத்தின் முதல் நாள் வசூல் விபரம்!

  • April 23, 2023
பாண்டியர்களின் வீரவரலாற்றை சொல்லும் யாத்திசை திரைப்படம் நேற்று திரையறங்குகளில் வெளியாகி நல்ல விமர்சனத்தை பெற்று வருகிறது. அறிமுக இயக்குனர் தரணி ராசேந்திரன் இயக்கத்தில் புது முகங்களான சேயோன்
error: Content is protected !!