மாஸ் நடிகருக்கு பிளாப் கொடுத்த நடிகர்…

சமீபகாலமாக நடிகர் ஒருவரின் சினிமா வளர்ச்சி அசுர தனமாக இருக்கிறது. ஆனால் அவரது சினிமா கேரியரை எடுத்துப் பார்த்தால் வளர்த்து விட்டவர்கள் எல்லோரையுமே காலால் எட்டி உதைத்து விட்டார்.
இப்படி தான் தனக்கு பிள்ளையார் சுழி போட்டவருடன் சண்டை போட்டார். இப்போது ஒரு பெரிய நடிகர் இவருக்கு வாய்ப்பு கொடுத்த நிலையில் அவருடன் போட்டி போட்டுக் கொண்டிருக்கிறார்.
சமீபத்தில் அவர் நடித்த படம் மிகப்பெரிய ஹிட் அடித்தது. அதன் பிறகு முன்னணி இயக்குனருடன் கூட்டணி போட்ட நிலையில் அதுதான் இப்போது சிக்கலில் மாட்டியிருக்கிறது. அந்த இயக்குனர் இப்போது வேறு ஒரு மாஸ் நடிகர் படத்தை எடுத்திருந்தார்.
அந்த படம் சூரா மொக்கையாக அமைந்துவிட்டது. பல படங்களின் கதையை உருட்டி எடுக்கும் அந்த இயக்குனர் மாஸ் ஹீரோவுக்கே பிளாப் படத்தை கொடுத்து விட்டார். இதனால் தன்னுடைய படம் என்ன ஆகுமோ என்று கவலையில் இருக்கிறார்.
மேலும் அந்த நடிகர் ஒரு பெரிய ஹிட் படம் கொடுத்தால் தொடர்ந்து நாலு முதல் ஐந்து படங்கள் தோல்விகளாகத்தான் கொடுப்பார். அப்படி இருக்கும் சூழலில் இந்த படமும் தோல்வியடைய அதிக வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது.
நடிகர் ஓவர் பில்டப் கொடுத்து சம்பளத்தை உயர்த்தி வரும் நிலையில் இப்போது பேரடியாக அந்த படம் அமைய இருக்கிறது. இந்த இயக்குனரை நம்பி இறங்கி விட்டோமே என்று பயத்தில் இருக்கிறார்.