அமெரிக்காவின் மிசிஸ்சிப்பி மாநிலத்தில் இடிந்து விழுந்த பாலம்; பலர் மரணம், காயம்
அமெரிக்காவின் மிசிஸ்சிப்பி மாநிலத்தில் பாலம் ஒன்று இடிந்து விழுந்ததில் பலர் உயிரிழந்துள்ளனர் மற்றும்பலர் காயமடைந்ததாகத் தெரிவிக்கப்பட்டது.இச்சம்பவம் அமெரிக்க நேரப்படி அக்டோபர் மாதம் 16ஆம் திகதி பிற்பகல் நிகழ்ந்தது.
ஆற்றுக்கு மேல் இருந்த அந்தப் பாலத்தை இடித்து அகற்றும் பணிகள் நடந்துகொண்டிருந்தபோது அது எதிர்பாராத விதமாக இடிந்து விழுந்ததாக மிசிஸ்சிப்பி போக்குவரத்துத்துறை தெரிவித்தது.
விபத்து காரணமாகப் உயிரிழப்புகள் ஏற்பட்டுள்ளதாகவும் உயிரிழந்தோரின் குடும்பங்களுக்குத் தங்கள் ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக்கொள்வதாகவும் போக்குவரத்துத்துறை கூறியது.
உயிரிழ்தோரின் எண்ணிக்கை குறித்து தகவல் வெளியிடப்படவில்லை.
விபத்தில் மூவர் உயிரிழந்ததாகவும் நால்வர் படுகாயம் அடைந்ததாகவும் சிம்சன் கவுன்டியின் ஷெரிஃப் பால் முல்லின்ஸ் தெரிவித்தார்.பாலம் இடிந்து விழுந்ததற்கான காரணமும் வெளியிடப்படவில்லை.
செய்தியாளர்கள் கேட்ட கேள்விகளுக்கு மிசிஸ்சிப்பி போக்குவரத்துத்துறையின் செய்தித்தொடர்பாளர் பதிலளிக்க மறுத்துவிட்டார்.கூடுதல் தகவல் கிடைத்ததும் அவை பகிர்ந்துகொள்ளப்படும் என்றார் அவர்.
பாலத்தை மாற்ற அங்கு கட்டுமானப் பணிகள் நடந்துகொண்டிருந்ததாகத் தெரிவிக்கப்பட்டது. செப்டம்பர் 18ஆம் திகதியிலிருந்து அந்தப் பாலம் மூடப்பட்டிருந்ததாகவும் வாகனங்கள் அங்கு செல்ல அனுமதிக்கப்படவில்லை என்றும் அதிகாரிகள் கூறினர்