10 லட்சத்துடன் வீடு திரும்பிய தொழிலதிபரை காணவில்லை!
மாத்தறை – தெனியாவவில் உள்ள தனியார் வங்கியொன்றில் 10 இலட்சம் ரூபாவை பெற்றுக்கொண்டு கொலன்னாவையில் உள்ள தனது வீட்டிற்குச் சென்று கொண்டிருந்த வர்த்தகர் ஒருவர் காணாமல் போயுள்ளார்.
இது தொடர்பில் வர்த்தகரின் மனைவி கொலன்ன பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்ததையடுத்து விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.
அவர் பயணித்த வேன் கொலன்ன – பனங்கந்த பிரதேசத்தில் இருந்து மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
எனினும் குறித்த வர்த்தகர் தொடர்பில் தமக்கு எவ்வித தகவலும் கிடைக்கவில்லை என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.





