உலகம்

கனடாவில் படுக்கையறையில் நுழைந்த வௌவால் : பலியான சிறுமி!

கனடாவின் ஒன்றாரியோ மாகாணத்தில் வௌவால் ஒன்றின் மூலம் பரவிய வைரஸ் தொற்றினால் சிறுமி ஒருவர் உயிரிழந்துள்ளார்.

ஒன்றாரியோ சுகாதார அதிகாரிகள் இந்த விடயத்தை உறுதி செய்துள்ளனர். வடக்கு ஒன்றாரியோ பகுதியில் இந்த சம்பவம் பதிவாகியுள்ளது.

வீட்டின் அறையில் வௌவால் ஒன்று இருந்ததாகவும் அந்த வௌவால் சிறுமியை கடிக்கவில்லை எனவும் பெற்றோர் தெரிவித்துள்ளனர்.

எவ்வாறு எனினும் துரதிஷ்டவசமாக வௌவாலின் மூலம் பரவிய வைரஸ் ஒன்றின் தாக்கம் காரணமாக அந்த சிறுமி உயிரிழந்துள்ளார்.

வௌவால்கள் மத்தியில் இந்த ராபீஸ் நோய் தொற்று பரவி வருவதாகவும் இது மனிதர்களுக்கும் தாக்கத்தை ஏற்படுத்தும் எனவும் ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.

1924 ஆம் ஆண்டு முதல் இதுவரையில் கனடாவில் ராபிஸ் நோயினால் பாதிக்கப்பட்ட 30 சம்பவங்கள் பதிவாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. மிகவும் அரிதாகவே இவ்வாறு நோய்த்தொற்று பரவும் என தெரிவிக்கப்படுகிறது.

(Visited 2 times, 1 visits today)

VD

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

உலகம் விளையாட்டு

சாம்பியன்ஸ் லீக் அரையிறுதிக்கு முன்னேறிய ரியல் மாட்ரிட் மற்றும் ஏசி மிலன்

  • April 19, 2023
ரியல் மாட்ரிட் சாம்பியன்ஸ் லீக் அரையிறுதியில் செல்சிக்கு எதிராக 2-0 என்ற கணக்கில் வெற்றி பெற்றது, அது 4-0 என்ற மொத்த வெற்றியைப் பெற்றது, போராடிக்கொண்டிருந்த லண்டன்
உலகம் கருத்து & பகுப்பாய்வு

விராட் கோலி முதல் விஜய் வரை அனைவரது டுவிட்டர் கணக்குகளிலும் ப்ளூ டிக் நீக்கம்

  • April 21, 2023
டுவிட்டர் சந்தா செலுத்தாதவர்களின் கணக்குகளில் ப்ளூ டிக் நீக்கப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது உலகின் மிகபெரிய பணக்காரரும், வாகன உற்பத்தி நிறுவனமான டெஸ்லாவின் தலைமை செயல் அதிகாரியான எலான் மஸ்க்