மாஸ் நடிகரால் விரக்தியில் மாமி நடிகை – பதறிப் போகும் தயாரிப்பாளர்கள்
மாமி நடிகை வீட்டில் தற்போது ஒரு இழப்பு ஏற்பட்டுள்ளது. அதிலிருந்து வெளிவர முடியாமல் நடிகை இப்போது தவித்துக் கொண்டிருக்கிறாராம்.
திருமணம் செய்து கொள்ளாமல் இளம் நடிகைகளுக்கு போட்டியாக தற்போது நடிகை பிஸியாக நடித்து வருகிறார். ரேஸ் நடிகருடன் அவர் நடித்துள்ள படம் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது.
அதேபோல் வெளிச்ச நடிகருடனும் நடித்து வருகிறார். அது மட்டுமல்லாமல் இன்னும் பல தயாரிப்பாளர்கள் இவரின் தேதிகளை கேட்டு காத்துக் கொண்டிருக்கின்றனர்.
ஆனால் நடிகையோ கையில் இருக்கும் படங்களை முடித்துவிட்டு சினிமாவுக்கு குட் பை சொல்ல போகிறாராம். இதற்கு முக்கிய காரணம் மாஸ் நடிகர் தான் என்ற பேச்சு அடிபட்டு வருகிறது.
அவருடன் நடிகையை இணைத்து வெளிவந்த கிசுகிசுக்கள் இரு குடும்பத்தையும் மனரீதியாக தாக்கி விட்டது. இதனால் நொந்து போன நடிகை சினிமாவும் வேண்டாம் ஒன்னும் வேண்டாம் என்ற முடிவுக்கு வந்துவிட்டாராம்.
ஆனால் ஹீரோவுக்கு நிகராக சம்பளம் வாங்கும் பெரிய நம்பர் நடிகையின் மார்க்கெட் இப்போது படுத்து விட்டது. இந்த சமயத்தில் மாமி நடிகைக்கு மவுசு அதிகரித்துள்ளது.
அதனால் காற்றுள்ள போதே தூற்றிக்கொள்ள வேண்டும். தேவையில்லாமல் வந்த வாய்ப்புகளை விட வேண்டாம் என நடிகைக்கு நட்பு வட்டாரங்கள் ஆலோசனை சொல்லி வருகிறார்களாம்.