தொம்பகொட இராணுவ முகாமில் உள்ள குளத்தில் 23 வயது இராணுவ சிப்பாய் சடலமாக மீட்பு!

ஹொரணை, தொம்பகொட இராணுவ முகாமில் உள்ள குளத்தில் இருந்து இன்று (29) அதிகாலை இராணுவ சிப்பாய் ஒருவரின் சடலம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
அந்த முகாமில் உடற் பயிற்சி பயிற்றுவிப்பாளராக கடமையாற்றிய எதிலிவெவ, தெலுல்ல கொலனியை சேர்ந்த 23 வயதுடைய தரிந்து லக்ஷான் என்ற இராணுவ வீரரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
சம்பவம் தொடர்பான நீதவான் விசாரணைகளை ஹொரணை நீதவான் இன்று (29) மேற்கொண்டார்.எனினும், உயிரிழந்த இராணுவ வீரரின் உறவினர்கள் மரணம் தொடர்பில் சந்தேகம் வெளியிட்டுள்ளனர்.
(Visited 11 times, 1 visits today)