பிரதமர் மோடியின் வருகை : காஷ்மீரில் பலப்படுத்தப்பட்டுள்ள பாதுகாப்பு
விரைவில் நடைபெற உள்ள நிலையில், ஜம்மு காஷ்மீரில் பல்வேறு வளர்ச்சித் திட்டங்களை தொடங்கி வைப்பதற்காக பிரதமர் மோடி எதிர்வரும் செவ்வாய்கிழமை 20 ஜம்மு காஷ்மீருக்கு பயணம் மேற்கொள்ளவுள்ளார்.
இரண்டாவது முறையாக பிரதமராக பொறுப்பேற்ற பின், பிரதமர் மோடி காஷ்மீருக்கு செல்வது இது இரண்டாவது முறையாகும்.
விரைவில் நாடாளுமன்றத் தேர்தல் நடைபெற உள்ள நிலையில், பிரதமர் மோடியின் காஷ்மீர் பயணம் முக்கியத்துவம் பெறுகிறது.
அங்கு எய்ம்ஸ் மருத்துவமனை உள்ளிட்ட பல்வேறு வளர்ச்சித் திட்டங்களை தொடங்கி வைக்கிறார்.
மேலும், பிரதமரின் இந்த பயணத்தின்போது, ஜம்முவில் உள்ள சேனாப் ஆற்றின் மேலே கட்டப்பட்டுள்ள உலகின் மிக உயரமான ரயில்வே பாலத்தையும் பிரதமர் மோடி திறந்து வைக்கவுள்ளார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதனைத் தொடர்ந்து ஜம்முவில் மௌலானா ஆசாத் மைதானத்தில் நடைபெறும் பேரணியில் பொதுமக்கள் மத்தியில் உரையாற்றுகிறார்.
இந்நிலையில், காஷ்மீரில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. பயங்கரவாத சதிவேலைகள் எதுவும் நடைபெறாமலிருக்க, முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக ஸ்ரீநகர் உள்பட பல்வேறு பகுதிகளிலும் வாகன சோதனைச்சாவடிகள் அமைக்கப்பட்டு, காவல்துறையினர் மற்றும் துணை ராணுவப் படையினர் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டு கண்காணித்து வருகின்றனர்.