துருக்கியில் காணாமல் போன 9 துருக்கிய சுரங்கத் தொழிலாளர்கள்: தேடுதல் பணிகள் தீவிரம்
துருக்கியில் உள்ள இலிக் நகருக்கு அருகில் ஏற்பட்ட நிலச்சரிவில் இருந்து ஒன்பது தொழிலாளர்கள் காணவில்லை என உள்துறை அமைச்சர் அலி யெர்லிகாயா உறுதிப்படுத்தினார்.
ஏறக்குறைய 400 தேடல் மற்றும் மீட்புப் பணியாளர்கள் மலைப்பகுதியான எர்சின்கான் மாகாணத்தில் சம்பவம் நடந்த இடத்திற்கு அனுப்பப்பட்டுள்ளனர்.
ஆனால், தாதுவில் இருந்து தங்கத்தைப் பிரித்தெடுக்கப் பயன்படுத்தப்படும் மிகவும் நச்சுத்தன்மை வாய்ந்த இரசாயன கலவையான சயனைடு – நிலத்தில் இருப்பதால் தேடுதல் சிக்கலாக இருப்பதாக நிபுணர்கள் மற்றும் உள்ளூர் அதிகாரிகள் தெரிவித்தனர்.
துருக்கியில் சமீப வருடங்களாக சுரங்க விபத்துகள் தொடர்கின்றன. 2022ல் நிலக்கரி சுரங்கத்தில் ஏற்பட்ட வெடிவிபத்தில் 42 பேர் உயிரிழந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
(Visited 5 times, 1 visits today)