ஆஸ்திரேலியாவில் கடற்கரைக்கு செல்லும் மக்களுக்கு எச்சரிக்கை
சிட்னியின் கிழக்கில் உள்ள குளோவெலி கடற்கரையில் நீராடச் செல்லும் போது கவனமாக இருக்குமாறு சுகாதார அதிகாரிகள் அறிவுறுத்தியுள்ளனர்.
இங்கு குளிப்பதற்குச் சென்ற ஒரு குழுவினர் குளித்தபின் உடலில் ஏற்பட்டுள்ள பாதிப்பு காரணமாகவே இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
இதன்காரணமாக சிட்னியில் உள்ள சுகாதார பிரிவினர், கடற்கரையை ஒட்டிய தோல் ஒவ்வாமைகள் ஏற்பட வாய்ப்புள்ளதால், மக்கள் கடற்கரைக்கு செல்லும் முன் எச்சரிக்கையாக இருக்குமாறு அறிவுறுத்தியுள்ளனர்.
எனினும், அதற்கான காரணம் இன்னும் உறுதிப்படுத்தப்படவில்லை.
சிட்னிக்கு கிழக்கே உள்ள குளோவெலி கடற்கரையில் அதே பகுதியில் தோல் நோய்த்தொற்று ஏற்பட்டவர்கள் நீந்திக் கொண்டிருந்ததாகத் தெரிவிக்கப்படுகிறது.
உடலில் சிவப்பு புள்ளிகள் இருப்பதாகவும், வலி இல்லை என்றும் கூறப்படுகிறது.
எவ்வாறாயினும், இது தொடர்பான விசாரணைகளை சுகாதார திணைக்களம் ஆரம்பித்துள்ளதுடன், ஒவ்வாமை ஏற்பட்டவர்கள் தற்போது சிகிச்சை பெற்று வருகின்றனர்.