தனிப்பட்ட தகராறு காரணமாக ஆனமடுவ பகுதியில் துப்பாக்கிச்சூடு!
ஆனமடுவ தட்டேவ பிரதேசத்தில் துப்பாக்கிச் சூட்டு சம்பவமொன்று இடம்பெற்றுள்ளது.
இன்று (08) பிற்பகல் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் காயமடைந்து ஆனமடுவ வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.
பின்னர், காயமடைந்தவர் மேலதிக சிகிச்சைக்காக புத்தளம் வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளார்.ஆனமடுவ பிரதேசத்தைச் சேர்ந்த 45 வயதுடைய ஒருவரே துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்காகியுள்ளார்.
துப்பாக்கிச் சூடு நடத்தியவர் தப்பிச் சென்றுள்ளதுடன், தனிப்பட்ட தகராறு காரணமாக துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டிருக்கலாம் என பொலிஸார் சந்தேகிக்கின்றனர்.
(Visited 24 times, 1 visits today)





