சிங்கப்பூரில் அச்சுறுத்தும் புதிய ஆபத்து – 18 பேர் பாதிப்பு
சிங்கப்பூரில் காட்டுப் பன்றிகள் ஆப்பிரிக்கப் பன்றிக் காய்ச்சலால் அச்சுறுத்த ஆரம்பித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இந்த காய்ச்சலினால் பாதிக்கப்பட்டிருக்கும் மேலும் 17 புதிய சம்பவங்கள் கண்டறியப்பட்டுள்ளன.
உலக விலங்குநல நிறுவனத்தின் ஆக அண்மைத் தகவல்படி சிங்கப்பூரில் மொத்தம் 18 சம்பவங்கள் பதிவாகியிருக்கின்றன.
அவற்றில் 15 சம்பவங்கள் காட்டுப் பன்றிகளின் சடலங்களில் கண்டறியப்பட்டுள்ளதெனவும், எஞ்சிய 3 சம்பவங்கள் பிடிபட்ட பன்றிகளில் உறுதிசெய்யப்பட்டதெனவும் குறிப்பிடப்படுகின்றது.
அவை மூன்றும் கொல்லப்பட்டதாக நிறுவனம் குறிப்பிட்டுள்ளது. ஆப்பிரிக்கப் பன்றிக் காய்ச்சல் பன்றிகளை மட்டும் பாதிக்கக்கூடியது.
அது மனிதர்களுக்குப் பரவக்கூடியது அல்ல என்றும் பொதுமக்களின் சுகாதாரத்திற்கு ஆபத்து இல்லை என்றும் விலங்குநல மருத்துவச் சேவைப் பிரிவு (Animal and Veterinary Service) கூறியது.
சிங்கப்பூரிலிருந்து வரும் பன்றி இறைச்சிப் பொருள்களின் இறக்குமதிக்குப் பிலிப்பீன்ஸ் சென்ற திங்கட்கிழமை தற்காலிகத் தடைவிதித்தது.