சுவிட்சர்லாந்தில் குதூகலமாக இருக்கும் பிரபல நடிகை… யார் தெரியுமா?

தெலுங்கில் ராம் சரனுடன் இணைந்து நடித்த மாவீரன் படத்தின்மூலம் புகழின் உச்சிக்கு சென்ற காஜல் தமிழிலும் பல படங்களில் நடித்துள்ளார்.
தமிழில் ஷங்கர் இயக்கத்தில் கமல் நடித்துள்ள இந்தியன் 2 மற்றும் தெலுங்கில் சத்யபாமா, ஹிந்தியில் உமா ஆகிய படங்களில் நடித்து வருகிறார் காஜல் அகர்வால்.
இன்னும் சில படங்களில் நடிப்பதற்கான பேச்சுவார்த்தையிலும் உள்ளார்.
கடந்த 2020ம் ஆண்டு கவுதம் கிச்சலு என்பவரை திருமணம் செய்து கொண்ட காஜல் 2022ம் ஆண்டு ஒரு ஆண் குழந்தை பிறந்தது.
அந்த குழந்தைக்கு நீல் என்று பெயர் வைத்தார்கள். இந்நிலையில் தற்போது குடும்பத்துடன் சுவிட்சர்லாந்து நாட்டிற்கு சுற்றுலா சென்றுள்ள காஜல், அங்கு பனி மழை பொழியும் பகுதிகளில் தனது கணவர் மற்றும் மகனுடன் எடுத்துக் கொண்ட கியூட்டான புகைப்படங்களை சோசியல் மீடியாவில் வெளியிட்டுள்ளார்.
(Visited 19 times, 1 visits today)