விரைவில் ஹீரோயின் ஆகும் நம்ம “கயல்”

தற்போது சன் டிவியின் டாப் சீரியல்களில் ஒன்று கயல் சீரியல். இதில் நடிகை சைத்ரா ரெட்டி கயலாக நடிக்கின்றார். தற்போது டிஆர்பி ரேட்டிங்கில் டாப் 2ல் இந்த தொடர் இருந்து வருகிறது.
இந்நிலையில் அவர் ஒரு அழகுகலை பயிற்சி அளிக்கும் மையத்தை சமீபத்தில் திறந்து வைத்தார். அதன் பின் செய்தியாளர்களிடம் பேசிய அவர்,
நாம் எந்த நிறம் ஆனாலும் நிறத்தில் இல்லை அழகு – நம்மிடம் உள்ள தன்னம்பிக்கையில் தான் நம் நிறங்களில் அழகு உள்ளது என சைத்ரா ரெட்டி கூறினார்..
தற்போது சின்னத்திரையில் பயணம் நன்றாக சென்று கொண்டிருக்கிறது. விரைவில் வெள்ளித்திரையில் மெயின் ரோலில் நடிக்க இருக்கிறேன் எனவும் கூறி இருக்கிறார்.
ஏற்கனவே சைத்ரா ரெட்டி, அஜித்தின் வலிமை படத்தில் ஒரு சின்ன ரோலில் நடித்து இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
(Visited 11 times, 1 visits today)