தனுஷை ஓரம்கட்டிய சிவகார்த்திகேயன்.. அயலான் – கேப்டன் மில்லர் 5வது நாள் வசூல் நிலவரம்
சிவகார்த்திகேயன் இப்போது சினிமாவில் முக்கிய இடத்தில் இருந்தாலும் ஆரம்பத்தில் அவரை வளர்த்து விட்டது தனுஷ் தான். தனது சொந்த தயாரிப்பு நிறுவனத்தின் மூலம் சிவகார்த்திகேயன் படங்களை தயாரித்தார்.
இந்த சூழலில் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ஜனவரி 12ஆம் தேதி சிவகார்த்திகேயனின் அயலான் மற்றும் தனுஷின் கேப்டன் மில்லர் படங்கள் மோதிக்கொண்டது.
பங்காளி சண்டையாக போய்க்கொண்டிருக்கும் நிலையில் இந்த பொங்கல் ரேஸில் யார் வின்னர் என்ற எதிர்பார்ப்பு நிலவியது.
இப்போது வாத்தியையே ஓரம்கட்டி சிவகார்த்திகேயன் வசூலில் பட்டையை கிளப்பி வருகிறார். சிவகார்த்திகேயனின் அயலான் படம் முதல் நாளில் உலகம் முழுவதும் 11 கோடி வசூல் செய்திருந்தது. இரண்டாம் நாளில் 8.5 கோடி மற்றும் மூன்றாவது நாளில் 9 கோடி வசூல் செய்தது. மேலும் பொங்கல் பண்டிகையான நவம்பர் 15 ஆம் தேதி நான்காவது நாளில் 10 கோடி வசூல் செய்தது.
இதுவரை 50 கோடி வசூல் செய்த நிலையில் நேற்றைய தினம் 8 கோடி வசூல் செய்ததாக கூறப்படுகிறது. ஐந்தாவது நாள் முடிவில் அயலான் வசூல் 58 கோடி ஆகும்.
அதேபோல் கேப்டன் மில்லர் படத்திற்கு நல்ல விமர்சனம் கிடைத்தாலும் பெரிய அளவில் வசூல் பெறவில்லை. முதல் நாளில் 8.65 கோடி வசூல் செய்து இருந்தது.
அடுத்தடுத்த நாட்களில் கேப்டன் மில்லர் படத்திற்கு திரையரங்குகளில் கூட்டம் குறைய ஆரம்பித்தது. அதன்படி நான்காவது நாள் முடிவில் 39.5 கோடி வசூல் செய்திருந்தது. மேலும் நேற்றைய தினம் 10 கோடி வசூல் செய்திருக்கிறது.
இந்த நிலையில் அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாக உள்ளது. மேலும் இனி வேலை நாட்கள் என்பதால் இரண்டு படங்களின் வசூல் குறைய வாய்ப்பிருக்கிறது.