குழந்தை பெற்றுக்கொள்வதில் ஆர்வம் காட்டாத இலங்கையர்கள்!

இலங்கையில் புதிதாக திருமணம் செய்து கொள்ளும் இளைஞர்கள் குழந்தை பெற்றுக் கொள்வதில் ஆர்வம் காட்டவில்லை என்று தரவுகள் சுட்டிக்காட்டியுள்ளன.
அத்துடன், திருமணம் செய்யாமல் இணைந்து வாழும் இளைஞர்களின் எண்ணிக்கையும் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
2012ஆம் ஆண்டு முதல் 2023ஆம் ஆண்டு ஜூன் மாதம் வரையிலான தரவுகளை அவதானிக்கும் போது, ஒரு இலட்சத்திற்கும் குறைவான புதிய பிறப்புகள் பதிவாகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
2013 ஆம் ஆண்டிலிருந்து, 2023 ஆம் ஆண்டு வரை இலங்கையில் புதிதாகப் பிறந்த குழந்தைகளின் எண்ணிக்கையில் விரைவான குறைவு தென்படுகின்றது.
(Visited 10 times, 1 visits today)