இஸ்ரேல் தாக்குதல் தீவிரம்: காசாவில் இருப்பதாயிரத்தை கடந்த பலி எண்ணிக்கை
இஸ்ரேல் தாக்குதலில் காசாவில் பலியானவர்கள் எண்ணிக்கை 20 ஆயிரத்தை நெருங்கி உள்ளது.மற்றும் சுமார் 1.9 மில்லியன் மக்கள் இடம்பெயர்ந்துள்ளனர்.
நேற்று இரவு காசா முனை பகுதி முழுவதும் தாக்குதல் நடத்தப்பட்ட தாகவும், இதில் ஏராளமானோர் உயிரிழந்ததாகவும் தகவல் வெளியாகி உள்ளது.
இதற்கிடையே காசாவில் ஹமாஸ் அமைப்பின் மிகப் பெரிய சுரங்கப் பாதையை கண்டு பிடித்து உள்ளதாக இஸ்ரேல் தெரிவித்து உள்ளது.
இன்று செவ்வாய் கிழமை வடக்கு காசாவில் உள்ள ஜபாலியா அகதிகள் முகாமில் இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் குறைந்தது 10 பாலஸ்தீனியர்கள் கொல்லப்பட்டனர் மற்றும் 40 பேர் காயமடைந்துள்ளனர் என ஹமாஸ் கட்டுப்பாட்டில் உள்ள பிராந்தியத்தில் உள்ள சுகாதார அமைச்சகத்தின் செய்தித் தொடர்பாளர் கூறியுள்ளார்.
இதற்கிடையே காசாவில் உடனடி போர் நிறுத்தம் கோரி ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலில் மீண்டும் தீர்மானம் கொண்டு வரப்படுகிறது. ஏற்கனவே கொண்டு வரப்பட்ட தீர்மானத்தை அமெரிக்கா வீட்டோ அதிகாரத்தை பயன்படுத்தி முறியடித்தது என்பது குறிப்பிடத்தக்கது.