அணு ஆயுத தாக்குதல் நடத்தினால் உடனடியாக பதிலடி கொடுக்கப்படும்.. வடகொரியாவுக்கு எச்சரிக்கை
வடகொரியா அணு ஆயுத தாக்குதல் நடத்தினால் உடனடியாக பதிலடி கொடுக்கப்படும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
அதற்கமைய, ஜனாதிபதி கிம் ஜாங் உன்னின் ஆட்சிக்கு உடனடியாக முடிவு கட்டப்படும் என அமெரிக்கா எச்சரித்துள்ளது.
தென்கொரியா, ஜப்பான், அமெரிக்கா போன்ற நாடுகளை தாக்கக்கூடிய ஏவுகணைகளை வடகொரியா சோதனையிட்டு வருவது தொடர்பாக வாஷிங்டனில் அமெரிக்க அதிகாரிகளும், தென்கொரிய அதிகாரிகளும் ஆலோசனை மேற்கொண்டனர்.
கண்டம் விட்டு கண்டம் பாய்ந்து அணு ஆயுத தாக்குதல் நடத்தக்கூடிய ஏவுகணையை இம்மாதம் வடகொரிய அரசு பரிசோதிக்ககூடும் என தென் கொரிய அதிகாரிகள் தெரிவித்தனர்.
அமெரிக்கா அல்லது தென்கொரியா மீது அணு ஆயுத தாக்குதல் நடத்தினால் உடனடியாக எதிர்வினை ஆற்றப்படும் என இரு நாட்டு அரசுகளும் கூட்டு அறிக்கை வெளியிட்டன.
(Visited 5 times, 1 visits today)