20 நாடுகளுக்கு இலவச விசா வழங்கும் இந்தோனேசியா!
இந்தோனேசிய சுற்றுலா மற்றும் படைப்பாற்றல் பொருளாதார அமைச்சகம் இந்தியா உட்பட 20 நாடுகளைச் சேர்ந்த பயணிகளுக்கு இலவச நுழைவு விசாக்களை வழங்க முன்மொழிந்துள்ளது.
சுற்றுலாப் பயணிகளின் வருகையை அதிகரிக்கவும், பொருளாதாரத்தில் பல மடங்கு உயர்வை கொண்டுவருவதற்காகவும் அந்நாடு இந்த திட்டத்தை கொண்டுவந்துள்ளது.
இந்தோனேசியா சுற்றுலாத்துறை அமைச்சர் சந்தியாகா சலாஹுதீன் யூனோ கூறுகையில், “தற்போதுள்ள விசா விலக்கு உள்ள நாடுகளைத் தவிர, அதிக வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளைக் கொண்ட 20 நாடுகளை அமைச்சகம் முன்மொழிந்துள்ளதாக தெரிவித்தார்.
20 நாடுகளுக்கு இலவச நுழைவு விசா வழங்குவது வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளின் வருகையை அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது எனவும் இது உள்நாட்டு நுகர்வை அதிகரிக்கும், முதலீட்டை ஈர்க்கும் மற்றும் டிஜிட்டல் பொருளாதாரத்தின் வளர்ச்சியை ஆதரிக்கும் என்றும் அவர் மேலம் தெரிவித்துள்ளார்.
20 நாடுகளில் ஆஸ்திரேலியா, சீனா, இந்தியா, தென் கொரியா, அமெரிக்கா, இங்கிலாந்து, பிரான்ஸ், ஜெர்மனி உள்ளிட்ட நாடுகளும் அடங்கும்.