தனுஷ் – 50 க்குப் பிறகு தனுஷ் என்ன செய்யப்போறார் தெரியுமா?
இயக்குநர் அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் ‘கேப்டன் மில்லர்’ படத்தில் தனுஷ் நடித்து முடித்துள்ளார். இந்தப் படம் டிச.15 ஆம் தேதி திரைக்கு வரவுள்ளது.
தொடர்ந்து, தன் 50-வது படத்தை சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் தனுஷ் இயக்கி வருகிறார்.
இந்தப் படத்தில் தனுஷுக்கு ஜோடியாக துஷரா விஜயனும், முக்கியக் கதாபாத்திரத்தில் சந்திப் கிஷன், செல்வராகவன் ஆகியோர் நடிக்கின்றனர்.

இந்நிலையில், இப்படத்திற்குப் பின் தனுஷ் தன் அக்கா மகனை நாயகனாக அறிமுகப்படுத்த உள்ளதாகவும் அப்படத்தை அவரே தயாரித்து இயக்கத் திட்டமிட்டுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
மேலும், இந்தப் படத்திற்கு ஜிவி பிரகாஷ்குமார் இசையமைக்க உள்ளதாகக் கூறப்படுகிறது.

(Visited 12 times, 1 visits today)





