பொழுதுபோக்கு

“லால் சலாம், கேப்டன் மில்லருக்கு செக் வைத்த அயலான்” மாஸ்டர் பிளான்… தெறிக்கப்போகும் பொங்கல் ரேஸ்

சிவகார்த்திகேயன் நடிப்பில் 2018ம் ஆண்டு தொடங்கப்பட்ட திரைப்படம் அயலான். ரவிக்குமார் இயக்கியுள்ள அயலான் அடுத்தாண்டு பொங்கல் ஸ்பெஷலாக வெளியாகிறது.

அயலானுடன் லால் சலாம், கேப்டன் மில்லர் திரைப்படங்களும் பொங்கலுக்கு வெளியாகவுள்ளன. இதனால் லால் சலாம், கேப்டன் மில்லருக்கு செக் வைக்க அயலான் டீம் புதிய முடிவெடுத்துள்ளது.

சிவகார்த்திகேயனின் மாஸ்டர் பிளான் சிவகார்த்திகேயன் நடிப்பில் கடைசியாக வெளியான மாவீரன், சூப்பர் ஹிட்டானது. அதனைத் தொடந்து ராஜ்கமல் ஃபிலிம்ஸ் பேனரில் தனது 21வது படத்தில் நடித்து வருகிறார்.

இதனிடையே சிவகார்த்திகேயன் நடித்துள்ள அயலான், தீபாவளி ரிலீஸில் இருந்து பொங்கல் ரேஸுக்கு மாறியது.

டிசம்பர் 15ம் தேதி வெளியாகவிருந்த கேப்டன் மில்லர், கடைசி நேரத்தில் பொங்கல் ரேஸில் இணைந்துள்ளது. ஒரே நேரத்தில் ரஜினி, சிவகார்த்திகேயன் இருவரையும் டார்க்கெட் செய்துள்ளார் தனுஷ்.

லால் சலாம் படத்தில் ரஜினி கேமியோ ரோலில் மட்டுமே நடித்துள்ளார். அதுமட்டும் இல்லாமல் லால் சலாம் ரிலீஸ் தள்ளிப் போகாது, கண்டிப்பாக பொங்கலுக்கு ரிலீஸாகும் என படக்குழு அறிவித்துவிட்டது.

இதனால் சிவகார்த்திகேயனின் அயலான் திரைப்படத்தின் ரிசல்ட்டுக்கு அதிக எதிர்பார்ப்பு காணப்படுகிறது. இந்நிலையில், லால் சலாம், கேப்டன் மில்லர் படங்களுக்கு செக் வைக்கும் வகையில் அயலான் டீம் அதிரடியாக முடிவு எடுத்துள்ளது.

அதன்படி, அயலான் படத்தை அதிகமான நாடுகளில் அதிக திரைகளில் வெளியிட படக்குழு முடிவு செய்துள்ளது. இதுவரை வெளியான சிவகார்த்திகேயனின் படங்களில் அயலான் தான் அதிக திரைகளில் வெளியாகவுள்ளதாகவும் படக்குழு தெரிவித்துள்ளது. இதனால், பொங்கல் போட்டியில் அயலான் – கேப்டன் மில்லர் இடையே கடும் போட்டி நிலவும் என எதிர்பார்க்கப்படுகிறது.

(Visited 2 times, 1 visits today)
Avatar

MP

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

பொழுதுபோக்கு

ஆஸ்கர் விருதை தட்டிச் சென்ற நாட்டு நாட்டு பாடல் – ரசிகர்கள் மகிழ்ச்சி

ஆர்.ஆர்.ஆர் திரைப்படத்தில் இடம்பெற்ற நாட்டு நாட்டு பாடலுக்கு ஆஸ்கார் விருது கிடைத்துள்ளது. சிறந்த பாடல் பிரிவில் அந்த பாடல் ஆஸ்கார் விருது வென்றுள்ளது. சினிமா உலகின் மிக
பொழுதுபோக்கு

பாண்டியர்களின் ஆட்டம் ஆரம்பம் : யாத்திசை படத்தின் முதல் நாள் வசூல் விபரம்!

  • April 23, 2023
பாண்டியர்களின் வீரவரலாற்றை சொல்லும் யாத்திசை திரைப்படம் நேற்று திரையறங்குகளில் வெளியாகி நல்ல விமர்சனத்தை பெற்று வருகிறது. அறிமுக இயக்குனர் தரணி ராசேந்திரன் இயக்கத்தில் புது முகங்களான சேயோன்

You cannot copy content of this page

Skip to content