ஜப்பானை ஓவர்டேக் செய்த ஜிகர்தண்டா டபுள் X…
கார்த்திக் சுப்புராஜ் இயக்கியுள்ள ஜிகர்தண்டா டபுள் எக்ஸ் திரைப்படம் நேற்று முன்தினம் வெளியானது.
இந்தப் படத்தில் எஸ்ஜே சூர்யா, ராகவா லாரன்ஸ் லீடிங் ரோலில் நடித்துள்ளனர்.
கார்த்தியின் ஜப்பான் படத்துடன் மோதிய ஜிகர்தண்டா டபுள் எக்ஸ், பாக்ஸ் ஆபிஸில் மாஸ் காட்டி வருகிறது.
இந்தப் படத்துக்கு கிடைத்த பாசிட்டிவான விமர்சனங்களால் இரண்டாவது நாள் வசூலில் ஜப்பானை ஓவர்டேக் செய்துள்ளது.
கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் எஸ்ஜே சூர்யா, ராகவா லாரன்ஸ் நடித்துள்ள திரைப்படம் ஜிகர்தண்டா டபுள் எக்ஸ். ஜிகர்தண்டா படத்தின் இரண்டாம் பாகமாக வெளியான டபுள் எக்ஸ், ரசிகர்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது.
எஸ்ஜே சூர்யா, ராகவா லாரன்ஸ் ஆகியோருடன் ஷைன் டாம் சாக்கோ, நிமிஷா சஜயன் உள்ளிட்ட பலரும் நடித்துள்ளனர், சந்தோஷ் நாராயணன் இசையமைத்துள்ளார்.
1975ம் ஆண்டு நடக்கும் பீரியட் ஜானர் படமாக உருவாகியுள்ளது ஜிகர்தண்டா டபுள் எக்ஸ். அதேநேரம் கார்த்திக் சுப்புராஜ் தனது ட்ரேட் மார்க்கான மதுரை கேங்ஸ்டர் கதைக்களத்தை இந்தப் படத்திலும் பக்காவாக செட் செய்துள்ளார். தமிழ் சினிமாவில் முதல் கறுப்பு ஹீரோ என்ற டெம்ப்ளேட்டை வைத்து ரசிகர்களுக்கு வைப் கொடுத்துள்ளார்.
முக்கியமாக படத்தின் கடைசி 40 நிமிடம் ரசிகர்களுக்கு செம்ம ட்ரீட்டாக அமைந்துள்ளது. அதேபோல் வழக்கம் போல நடிப்பில் அசுரத்தனம் காட்டியுள்ளார் எஸ்ஜே சூர்யா. மாநாடு, டான், மார்க் ஆண்டனி படங்களைப் போல, ஜிகர்தண்டா டபுள் எக்ஸ்ஸும் எஸ்ஜே சூர்யா கேரியரில் முக்கியமான படமாக அமைந்துள்ளது.
இந்நிலையில், ஜிகர்தண்டா டபுள் எக்ஸ் படத்திற்கு முதல் நாளில் ஓபனிங் குறைவாக இருந்தாலும், பாசிட்டிவான விமர்சனங்கள் கிடைத்தன.
ஆனாலும் இந்தப் படத்துக்கு முதல் நாளில் 2.5 கோடி ரூபாய் மட்டுமே வசூலித்தது. இன்னொரு பக்கம் கார்த்தியின் ஜப்பான் படத்துக்கு நெகட்டிவான விமர்சனங்கள் கிடைத்தன. இதனால், இரண்டாவது நாளில் இருந்து ஜிகர்தண்டா டபுள் எக்ஸ் படத்துக்கு வரவேற்பு அதிகரிக்கத் தொடங்கியுள்ளது. அதன்படி, இந்தப் படம் இரண்டாவது நாளில் 4.50 கோடி வசூல் செய்துள்ளதாக பாக்ஸ் ஆபிஸ் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
இன்று தீபாவளி என்பதால், ஜிகர்தண்டா டபுள் எக்ஸ் படத்தின் வசூல் மேலும் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. அதேநேரம், நாளை திங்கட் கிழமை முதல், ஜிகர்தண்டா டபுள் எக்ஸ் படத்திற்கு ஸ்க்ரீன்கள் அதிகம் ஒதுக்கப்படுவதாகவும் தகவல்கள் வெளியாகி வருகின்றன.