ஆஸ்திரேலியாவில் சைபர் தாக்குதல் – முடங்கிய துறைமுகங்களின் செயல்பாடுகள்
ஆஸ்திரேலியா முழுவதும் பல துறைமுகங்களில் செயல்பாடுகள் சீர்குலைந்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
சைபர் பாதுகாப்பு சம்பவத்தையடுத்து இந்த நிலைமை ஏற்பட்டுள்ளதாக குறிப்பிடப்படுகின்றது.
இது நாட்டின் இரண்டாவது பெரிய துறைமுக ஆபரேட்டரான டிபி வேர்ல்டின் தகவல் அமைப்பை தாக்கியதாகக் கூறப்படும் சைபர் தாக்குதல் காரணமாகும்.
இதனால், சிட்னி – மெல்பேர்ன் – பிரிஸ்பேன் மற்றும் ஃப்ரீமண்டில் துறைமுகங்களில் உள்ள அவர்களது அலுவலகங்கள் தற்காலிகமாக மூடப்பட்டு, கடந்த வெள்ளிக்கிழமை முதல் எந்தவித அனுமதிப் பணிகளும் நடைபெறவில்லை.
இதற்கு ஆஸ்திரேலிய சைபர் பாதுகாப்பு ஆணையமும் ஆதரவு அளித்து வருவதாகவும், விரைவில் அதை மீட்டெடுக்க முயற்சிகள் மேற்கொள்ளப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
(Visited 7 times, 1 visits today)