பொழுதுபோக்கு

“இதுக்கேத்த இது. இதுக்கேத்த இது இருக்கனும்” அசிங்கப்பட்ட நிக்சன்

வினுஷா குறித்து பிக்பாஸ் போட்டியாளர் நிக்சன் சொன்ன கேவலமான கமெண்ட்டை குறும்படம் போட்டுக்காட்டியதால் ஹவுஸ்மேட்ஸ் அவரை சரமாரியாக சாடி உள்ளனர்.

விசித்ரா, தினேஷ், அர்ச்சனா ஆகியோர் பிரதீப்புக்கு எதிராக ஆதரவாக விவாதித்ததால், மாயா, பூர்ணிமா, ஐஷூ, ஜோவிகா, நிக்சன் ஆகியோர் அவர்களிடம் சண்டையிட்டு வருகின்றனர்.

. இதுதான் கடந்த இரு தினங்களாக தொடர்ந்து வருகிறது. இந்த நிலையில், பிக்பாஸ் வீட்டில் பிரதீப்புக்கு எதிராக பேசும் பலர் என்னென்ன கீழ்தரமான கமெண்ட்டுகளை செய்துள்ளார்கள் என்பதை குறும்படமாக போட்டுக்காட்டி அதற்கு சம்பந்தப்பட்ட போட்டியாளர் விளக்கம் கொடுக்க வேண்டும் என கூறி இருக்கிறார்.

இதில் நிக்சன் வினுஷா பற்றி கூறிய கமெண்ட்டும் இடம்பெற்று உள்ளது. அந்த கமெண்ட்டில், “வினுஷா வேலைக்காரி. Not my Type, ஒரு ஒருத்தங்களுக்கு ஒன்னு Attract ஆகணும்ல? எனக்கு வந்து உடம்புங்கிறது Perfect ஆ இருக்கனும். இதுக்கேத்த இது. இதுக்கேத்த இது. அவங்களுக்கு மண்ட மட்டும் தான் குட்டியா இருக்கு. அவங்க கண்ணு நல்லா இருக்கு. டிரெஸ் போட்டா Perfect ஆ இருக்கு. அது ஓகே… பூர்ணிமாக்கா அழகா இருக்காங்க. அந்த மாதிரி தான் இருக்கனும் Perfect ஆ” என பேசி உள்ளார். அவர் ஐஷூவிடம் தான் இந்த கமெண்ட்டை சொன்னார்.

இதைப்பார்த்து விசித்ரா, அர்ச்சனா, ரவீனா உள்ளிட்ட ஹவுஸ்மேட்ஸ் முகம்சுளித்தனர். உடனே சிரித்துக் கொண்டே விளக்கம் கொடுக்க சென்ற நிக்சன், விசித்ராவை பார்த்து நான் அந்த அர்த்தத்துல சொல்லல, நீங்க அப்படி மூஞ்ச வச்சிட்டு இருந்தீங்கனா செம்ம டென்ஷன் ஆகுது. அந்த மாதிரி நான் பேசல. அப்படி நீங்க நினைத்திருந்தால் சாரி என கைகூப்பி மன்னிப்பு கேட்கும் காட்சிகள் அதில் இடம்பெற்று உள்ளது

https://twitter.com/vijaytelevision/status/1722105344141492488

MP

About Author

You may also like

பொழுதுபோக்கு

ஆஸ்கர் விருதை தட்டிச் சென்ற நாட்டு நாட்டு பாடல் – ரசிகர்கள் மகிழ்ச்சி

ஆர்.ஆர்.ஆர் திரைப்படத்தில் இடம்பெற்ற நாட்டு நாட்டு பாடலுக்கு ஆஸ்கார் விருது கிடைத்துள்ளது. சிறந்த பாடல் பிரிவில் அந்த பாடல் ஆஸ்கார் விருது வென்றுள்ளது. சினிமா உலகின் மிக
பொழுதுபோக்கு

பாண்டியர்களின் ஆட்டம் ஆரம்பம் : யாத்திசை படத்தின் முதல் நாள் வசூல் விபரம்!

  • April 23, 2023
பாண்டியர்களின் வீரவரலாற்றை சொல்லும் யாத்திசை திரைப்படம் நேற்று திரையறங்குகளில் வெளியாகி நல்ல விமர்சனத்தை பெற்று வருகிறது. அறிமுக இயக்குனர் தரணி ராசேந்திரன் இயக்கத்தில் புது முகங்களான சேயோன்
error: Content is protected !!