இலங்கை ரக்பி மீதான தடையை நீக்கிய உலக ரக்பி கவுன்சில்
இலங்கை ரக்பிக்கு விதிக்கப்பட்டிருந்த தற்காலிக தடையை உலக ரக்பி கவுன்சில் நீக்கியுள்ளதாக விளையாட்டு அமைச்சகம் குறிப்பிட்டுள்ளது.
ஐக்கிய அரபு எமிரேட்ஸின் டுபாயில் இடம்பெற்ற சந்திப்பின் போது, விளையாட்டுத்துறை அமைச்சர் ரொஷான் ரணசிங்கவிடம் ஆசிய ரக்பி தலைவர் கைஸ் அல்-தலாய் இதனைத் தெரிவித்தார்.
அந்த வகையில், உலக ரக்பி நிர்வாக சபையின் தீர்மானம் எதிர்வரும் நாட்களில் உத்தியோகபூர்வமாக அறிவிக்கப்படும் என பிராந்திய ரக்பி நிர்வாக சபையின் தலைவர் இலங்கை நாடாளுமன்ற உறுப்பினரிடம் தெரிவித்தார்.
மே 17 அன்று, உலக ரக்பி கவுன்சில், இலங்கை ரக்பிக்கு தற்காலிக தடை விதித்தது,
உலக ரக்பி கவுன்சில் மற்றும் ஆசியா ரக்பி சர்வதேச கூட்டமைப்பு மற்றும் பிராந்திய சங்கம் அனைத்து பங்குதாரர்களுடனும் இணைந்து இலங்கையில் ரக்பிக்கு குறைந்த பட்ச இடையூறு ஏற்படுவதை உறுதிசெய்யும் என்று ஒப்புக்கொண்டதை அடுத்து இந்த இடைநிறுத்தம் நடைமுறைக்கு வந்தது.