இலங்கை

இஸ்ரேல் மேற்கொள்ளும் அட்டூழியங்களை நிறுத்த வேண்டும்: ஏறாவூரில் எதிர்ப்புப் பேரணி

பலஸ்தீனத்திலும் காஸா பிரதேசத்திலும் இஸ்ரேல் மேற்கொள்ளும் அட்டூழியங்களையும் போர்க் குற்றங்களையும் கண்டித்தும் போர் நிறுத்தம் வேண்டும் என்று வலியுறுத்தி இன்று (03) எதிர்ப்பு ஆர்ப்பாட்டமொன்று இடம்பெற்றது.

மட்டக்களப்பு – கொழும்பு பிரதான வீதி ஏறாவூர் நகரில் இக்கண்டன எதிர்ப்புப் பேரணி இடம்பெற்றது

மட்டக்களப்பு நாடாளுமன்ற உறுப்பினர் அலி ஸாஹிர் மௌலானா தலைமையில் இடம்பெற்ற இந்த கண்டன எதிர்ப்பு பேரணியில் நூற்றுக் கணக்கானோர் கலந்து கொண்டனர்.

பேரணியின் இறுதியில் பலஸ்தீனப் பொதுமக்கள் சிறுவர்கள் நோயாளிகள் பெண்கள் ஆகியோர் மீது இஸ்ரேல் மேற்கொள்ளும் அட்டூழியங்களையும் போர்க் குற்றங்களையும் கண்டித்து கறுப்புக் கொடிகள் கட்டப்பட்டன.

அத்தோடு பலஸ்தீன நாட்டின சுதந்திரத்தை உறுதி செய்து இஸ்ரேலை வெளியேற்ற ஐக்கிய நாடுகள் சபையைக் கோருவதற்காக கையெழுத்து சேகரிப்பும் இடம்பெற்றது.

நாடாளுமன்ற உறுப்பினர் அலி ஸாஹிர் மௌலானா முதல் கையெழுத்தை இட்டு கையொப்ப சேகரிப்பை ஆரம்பித்து வைத்தமை குறிப்பிடத்தக்கது.

 

 

(Visited 8 times, 1 visits today)

TJenitha

About Author

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
இலங்கை செய்தி

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு!

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு! இலங்கையில் பெண்களிற்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பெண் பாராளுமன்ற உறுப்பினர்கள் குழு பெண்களிற்கு எதிரான சைபர்