இலங்கையை வீழ்த்திய இந்திய அணிக்கு மோடி வாழ்த்து
உலகக் கிண்ண தொடரில் இலங்கை அணிக்கு எதிரான போட்டியில் இந்திய அணி வெற்றிபெற்ற நிலையில், இந்திய அணிக்கு பிரதமர் மோடி வாழ்த்து கூறியுள்ளார்.
மும்பை வான்கடே மைதானத்தில் இன்று நடைபெற்ற இலங்கைக்கு எதிரான போட்டியில் 302 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற இந்திய கிரிக்கெட் அணிக்கு இந்திய பிரதமர் நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்.
“உலகக் கோப்பையில் இந்திய அணி தடுக்க முடியாதது! இலங்கைக்கு எதிராக அபார வெற்றி பெற்ற அணிக்கு வாழ்த்துக்கள்! இது விதிவிலக்கான குழுப்பணி மற்றும் விடாமுயற்சியின் வெளிப்பாடாக இருந்தது” என்று மோடி ட்வீட் செய்துள்ளார்.

(Visited 10 times, 1 visits today)





